புதிய தொழில் 24 மணி நேரமும் பால் வழங்கும் மில்க் ஏ.டி.எம் இயந்திரம் (Milk ATM Business Plan)..!
புதிய தொழில்: வணக்கம் இன்று நாம் முற்றிலும் புதுமையான பிசினஸ் ஐடியாவை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இது தமிழ் நாட்டிற்கு மிகவும் ஏற்ற தொழில் என்றே சொல்லலாம். இந்த தொழிலை ஏற்கெனவே தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பட்டதாரி இளைஞர் செய்து வருகிறார்.
அப்படி என்ன புதிய தொழில் என்று யோசிக்கிரிர்களா? அதாவது மில்க் ஏ.டி.எம் இயந்திரம் மூலம் 24 மணி நேரமும் கரவை பால் அதாவது பசும் பாலை விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் இப்போது நாம் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள போகிறோம்…
சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..? |
Milk ATM Business Plan..!
முதலில் இந்த மில்க் ஏ.டி.எம் இயந்திரத்தின் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்:
பால் வியாபாரம் செய்வது எப்படி: புதிய தொழில் – 300 லிட்டர் கொள்ளளவும் இரண்டு நாள்கள் வரை பதப்படுத்தும் வசதியும் கொண்டது இந்த மில்க் ஏ.டி.எம் இயந்திரம்.
குறிப்பாக ரூ.10, ரூ.50, ரூ.100 என பணமாகவோ அல்லது நாணயமாகவோ, செலுத்தி அதற்கேற்ற பாலை நுகர்வோர் தாமாகவே பெற்றுக்கொள்ளலாம் இந்த மில்க் ஏ.டி.எம் இயந்திரத்தில்.
மேலும் ஏ.டி.எம் போன்ற அட்டைகளைப் பயன்படுத்தும் வசதியும் இந்த இயந்திரத்தில் உள்ளது.
குறிப்பாக ஏ.டி.எம் போலதான் இயக்கும் இந்த மில்க் ஏ.டி.எம் (milk atm business plan) இயந்திரமும். மிக எளிமையானது. சிறியவர்கள்கூட வந்து சிரமமின்றி வாங்கிச்செல்லும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயன்கள்:
புதிய தொழில் (Milk ATM Business Plan) – இந்த மில்க் ஏ.டி.எம் இயந்திரம் மூலம் 24 மணி நேரமும் சுத்தமான பசும் பால் கிடைக்கும் என்பதினால் பசும் பால் தேவைப்படும் தாய்மார்கள், இல்லையென்றால் வேற சில விஷயங்களுக்கு பயன்படுத்துபவராக இருந்தாலும் அனைவருக்குமே இந்த மில்க் ஏ.டி.எம் மிஷின் மூலமாக 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ளலாம் என்பதினால் மக்கள் இடையே அதிக வரவேற்பு உள்ளது.
நல்ல ட்ரெண்டிங்கில் பனை மர இலை தட்டு தயாரிப்பு..! |
பால் கொள்முதல்:
புதிய தொழில் (Milk ATM Business Plan) – இந்த தொழில் பொறுத்தவரை பால் வைத்திருப்பவர்களிடமிருந்து மொத்தமாக பால் வாங்கிக்கொள்ளலாம்.
இல்லையெனில் நிறைய பேர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பால் வாங்கி கொள்ளலாம்.
இல்லையெனில் பால் வைத்திருப்பவர்கள் இந்த தொழிலை எளிதாக தொடங்கலாம்.
குறிப்பாக மல்லிகை கடை வைத்திருப்பவர்கள் உங்கள் கடைக்கு பக்கத்திலேயே பத்துக்கு பத்து அளவு கொண்ட ஒரு அறையில் இந்த மிஷினை செட் செய்து பால் விற்பனை செய்யலாம்.
மில்க் ஏ.டி.எம் மிஷினை எங்கெங்கே செட் செய்யலாம்:-
புதிய தொழில் – இந்த மில்க் ஏ.டி.எம் மிஷினை மெயின் ரோட்டில் அமைப்பதை விட. அதிக வீடுகள் இருக்கும் ஏரியாவில் செட் செய்யலாம். அதேபோல் அதிக மக்கள் நடமாடும் இடங்களில் இந்த மில்க் ஏ.டி.எம் மிஷினை செட் செய்யலாம்.
Milk ATM Business Plan – முதலீடு:
- இயந்திரம் வாங்க ஆகும் செலவு – ரூ.2,00,000/-
- ரூம் செலவு – ரூ.50,000/-
- இதர செலவு – ரூ.10,000/-
நன்மை:
- 24 X 7 பால் கிடைக்கும்.
- வேலையாட்கள் தேவையில்லை.
- மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளதால் அதிக லாபம் கிடைக்கும்.
மில்க் ATM இயந்திரம் வாங்க:
இந்த மிஷினை INDIAMART.COM ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஆடர் செய்து வாங்கிக்கொள்ளலாம். தமிழ்நாட்டிற்கு மிக சிறந்த தொழில்.
மில்க் ATM இயந்திரம் வாங்க இங்கே கிளிக் பண்ணவும்–> Milk ATM Machine
பேப்பர் கப் தயாரிக்கும் முறை..! – அதிக வருமானம் தரும் தொழில்.. |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தொழில் பட்டியல் 2019 |