வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வீட்ல Table Size இடம் இருந்தாலே போதும்..! தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: April 17, 2023 4:50 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Moringa Tablet Making Business in Tamil

பணம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒரு விஷயமாகி விட்டது. அதனால் அதனை சம்பாதிப்பதற்காக நாம் அனைவருமே மிகவும் கஷ்டப்படுகிறோம். அதாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க வேண்டும் என்கின்ற சூழல் வந்து விட்டது.

அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான தொழிலை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் முருங்கை கீரை மாத்திரை தயாரிக்கும் தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி பணத்தை சம்பாதித்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Moringa Tablet Making Business Plan in Tamil:

Moringa Tablet Making Business Plan in Tamil

முருங்கை கீரையில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் இதனை தினமும் சாப்பிடுவது நமது உடலுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கும் என்பதை நாம் அனைவருமே அறிந்தது.

ஆனால் அதனை தினமும் சாப்பிடுவது என்பது சாத்தியமான விஷயம் இல்லை. ஏனென்றால் இன்றைய சூழலில் இது தினமும் கிடைப்பதில்லை. அதனால் இதனை மாத்திரையாக பலரும் சாப்பிடுகிறார்கள். அதனால் நீங்கள் இந்த முருங்கைக்கீரை மாத்திரை தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள முருங்கை கீரை, Moringa Tablet Making Machine, கண்ணாடி பாட்டில் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Moringa Tablet Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க வீட்ல சிறிய இடம் இருந்தாலே போதும் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் தயாரித்து வைத்துள்ள முருங்கை கீரை மாத்திரைகளை Online மூலமாக விற்பனை செய்ய இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் நீங்கள் தொடங்குவதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான Table Size இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

Moringa Tablet Manufacturing Business in Tamil

 

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள முருங்கை கீரையை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனை நன்கு வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து சலித்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை Moringa Tablet Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மிஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான மாத்திரைகளை தயாரித்து தந்து விடும்.

பிறகு அதனை நாம் வாங்கி வைத்துள்ள கண்ணாடி பாட்டில்களில் ஒரு பாட்டிலுக்கு 120 மாத்திரை என்ற விகிதத்தில் வைத்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தினமும் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரை மாத்திரையை  நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 பாட்டில் முருங்கைக்கீரை மாத்திரையின் விலை 250 ரூபாய் – 300 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 பாட்டில் விற்பனை செய்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

இந்த முருங்கைக்கீரை மாத்திரை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 1,000 ரூபாய் முதலீட்டில் தினமும் 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் இந்த தொழிலை மிஸ் பண்ணிடாதீங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Nail Manufacturing Business in Tamil

வீட்டிற்கு தேவையான ஒன்று இதில் வருமானத்தை அள்ளலாம்!

Part-Time Business Ideas Without Investment in tamil

படிக்கும் போதே இந்த தொழிலை செய்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்

Juice Shop Business Ideas in Tamil

கோடை காலத்தில் நல்ல வருமானம் தரும் ஜூஸ் கடை தொழில் | Juice Shop Business Ideas in Tamil

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!