எக்காலத்திலும் அழியாத தொழிலை செய்து முதலாளியாக மாறுங்கள்..!

Advertisement

Profit Business Ideas in Tamil

மற்ற நிறுவனத்தில் சென்று வேலை பார்ப்பதை பலரும் விரும்புவதில்லை. ஏனென்றால் நேரம், விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும். அதுவே சொந்தமாக தொழில் செய்தால் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. அதில் வரும் லாபம் மற்றும் நஷ்டம் எல்லாம் நாம் செய்கின்ற வேலையை பொறுத்து கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க என்ன  தொழில், எப்படி செய்யலாம் போன்ற விவரங்களை படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Homemade Food Business Ideas in India: 

Food Business Ideas From Home in Tamil

மனிதனின் வாழ்க்கையில் உணவு என்பது முக்கியமான ஒன்றாகும். ஆனால் இந்த உணவை சரியான நேரத்தில், சரியான உணவை எடுத்து கொள்ள நேரமில்லை. ஏனென்றால் வீட்டில் இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள்.

சொல்லப்போனால் ஒரு வேலை மட்டும் தான் வீட்டில் சமைத்து சாப்பிடுவார்கள். இரண்டு வேலை கடையில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் நீங்கள் எந்த மாதிரியான உணவு தொழிலை செய்தாலும் கண்டிப்பாக வெற்றி தான். இந்த பதிவில் வீட்டில் இருந்து செய்ய கூடிய உணவு தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம்.

Hostel Food Ideas in Tamil:

உங்கள் ஊர் அல்லது பக்கத்து ஊரில் Hostel இருக்கும். Hostel -லிலே பல வகைகள் உள்ளது. வேலை பார்ப்பவர்களுக்கு, படிக்கும் மாணவர்களுக்கு என்று உள்ளது. இவர்கள் தான் உங்க டார்கெட். ஏனென்றால், கடையில் வாங்கி சாப்பிடும் உணவுகளை விட வீட்டில் இருந்து சாப்பிடும் உணவுகள் கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ எதிர்காலத்தில் கொடி கட்டி பறக்கும் தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

நீங்கள் முதலில் வெளியூரிலுருந்து வந்து வேலை செய்பவர்கள் இடத்திற்கு சென்று உங்களை பற்றிய தகவல்களை கொடுக்க வேண்டும். அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் எத்தனை பேர் உள்ளனர் போன்ற விவரத்தை எல்லாம் சேகரித்து வர வேண்டும். பிறகு எத்தனை வேலை சாப்பாடு, என்னென்ன உணவு என்றெல்லாம் கேட்டு கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு ஞாயிறு முதல் சனி கிழமை வரை ஒவ்வொரு நாளும் என்ன உணவு வேண்டும் அட்டவணை போட்டு உணவு கொடுக்கலாம். இதில் காலை மற்றும் இரவு டிப்பன் தான். மதியம் மட்டும் தான் சாப்பாடு. வாரத்தில் ஒரு நாள் அசைவம், கீரை போன்றவை கொடுக்கலாம். இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை உங்களது வீடே போதுமானது.

வருமானம்:

ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 100 என்றால் 30 பேருக்கு உணவு கொடுத்தால் 3,000 ரூபாய். அதுவே ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை செய்து வாழ்வில் முன்னேறுங்கள்.

Food Order Business in Tamil:

Food Business Ideas From Home in Tamil

உணவு தொழிலை நீங்கள் ஆர்டர் எடுத்தும் செய்யலாம். அதாவது வீட்டில் நடக்கும் அனைத்து சுப நிகழ்ச்சிகளில் ஆர்டர் எடுக்கலாம். அதற்கு உங்களின் சமையல் கலை  வெளியுலகத்திற்கு தெரிய வேண்டும்.

அப்போது தான் அந்த ஆர்டர் உங்களுக்கு கிடைக்கும். இந்த மாதிரி ஆர்டர் எடுத்து சமைத்தால் ஒரு சுப நிகழ்ச்சிக்கு 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இதுவே சுப நிகழ்ச்சியை பொறுத்தும், சமைக்கும் அளவை பொருத்தும் மாறுபடும்.

இதையும் படியுங்கள் ⇒ மாதச் சம்பளத்திற்கு வேலை செய்யாமல் நீங்களே முதலாளியாக மாற சூப்பர் ஐடியா..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil

 

Advertisement