பணம் சம்பாதிக்கும் வழிகள்
வணக்கம் நண்பர்களே.! தினமும் புது வகையான தொழில் மற்றும் உங்களுக்கு பயனுள்ள வகையில் யோசனைகள் சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சூப்பரான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அனைவருக்கும் கல்வி என்பது முக்கியனமான ஒன்றாகும். கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வி இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதனால் நீங்கள் கல்வியை சொல்லி கொடுத்தால் அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். வாங்க எப்படி சம்பாதிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்
Tuition Business Ideas in Tamil:
Tuition என்பது முன்னாடியெல்லாம் படிக்காத மாணவர்கள் தான் Tuition -க்கு செல்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் எல்லாருமே Tuition-க்கு செல்கிறார்கள். அதனால் நீங்கள் கல்வி கற்பித்தால் நல்லா சம்பாதிக்கலாம்.
முதலில் Tuition சொல்லி கொடுப்பதற்கு இடம் வேண்டும். உங்கள் வீட்டிலே இடம் இருக்கிறது என்றால் வீட்டிலே சொல்லி கொடுக்கலாம். இல்லையென்றால் தனி இடம் நல்லா MAIN ஆன இடமாக பார்த்து கொள்ளலாம்.
Tuition சொல்லி கொடுக்கும் இடத்தில் மின்சார வசதி இருக்க வேண்டும். அந்த இடம் அமைதியாக இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் Black Board மற்றும் chak peace, duster இருக்க வேண்டும். இதெல்லாம் Tuition சொல்லி கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.
நீங்கள் கல்வி சொல்லி கொடுக்கும் நேரத்தை choose பண்ண வேண்டும். அந்த நேரத்தில் கற்பிக்க வேண்டும்.
பணம் சம்பாதிப்பது எப்படி?
நீங்கள் இந்த பாடத்தில் நான் புலி என்றால் அந்த பாடத்தை சொல்லி கொடுக்கலாம்.
இல்லை நான் எல்லாம் பாடமும் சிறப்பாக கற்பிப்பேன் என்றால் நீங்கள் கற்பிக்கலாம். ஒவ்வொரு வகுப்பிற்கும் நேரத்தை பிரித்து கற்பிக்க வேண்டும். உங்கள் ஏரியாவில் என்ன பாடத்திற்கு Tuition எடுக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவும்.
நீங்கள் பாட புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் கற்பிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. உதாரணமாக ஹிந்தி, Spoken English, Drawing இப்படி கல்வியில் பல விஷயங்கள் உள்ளன. அவற்றையும் நீங்கள் கற்பிக்கலாம்.
ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு Amount மாறுபடும். எடுத்துக்காட்டாக LKG முதல் 5th வரை 300 ரூபாய் பெற்று கொள்ளலாம். இதில் 10 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் மாதம் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
அடுத்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பித்தால் 500 ரூபாய் பெற்று கொள்ளலாம். இதில் 5 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் மாதம் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
அடுத்து 10ஆம் வகுப்புக்கு மட்டும் எடுக்கிறீர்கள் என்றால் 800 ரூபாய் பெற்று கொள்ளலாம். இதில் 10 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் மாதம் 8000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
மேல் கூறப்பட்டவை எடுத்துக்காட்டு தான். நீங்கள் எல்லாம் பாடம் கற்பிக்கிறீர்கள் என்றால் அதுக்கு ஒரு தொகையும், ஒரு பாடம் மட்டும் கற்பிக்கிறேன் என்றால் அதுக்கு ஒரு தொகையும் பெற்று கொள்ளலாம்.
இதன் மூலம் நீங்கள் தோராயமாக மாத வருமானம் 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
உங்கள் Tuition -லில் படிக்கும் மாணவர்களை நல்லா மதிப்பெண் பெற்றார்கள் என்றால் உங்களை தேடி வருவார்கள்.
இதையும் படியுங்கள் ⇒ யாரும் செய்திடாத புதிய தொழில்..! Waste-ல் இருந்து பல கோடி சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |