இந்த கடையை வைத்தால் போதும்.. தினமும் 5000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்..!

 Two Wheeler Spare Parts Business Plan in Tamil

 Two Wheeler Spare Parts Business Plan in Tamil

இக்காலத்தில் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடுகள் என்பது அதிகமாகவே உள்ளது. ஒவ்வொருவரின் அன்றாட தேவைக்கு ஏற்றவாறு இருசக்கர வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். உலகிலேயே அதிக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள் தான். எனவே இரு சக்கர வாகனங்களின் பயன்பாடுகள் அதிகமாக இருக்கும்போது, அந்த இரு சக்கர வாகனங்களுக்கு பொருத்தப்படும் உதிரி பாகங்களின் தேவையும் அதிகமாகத்தான் இருக்கும். எனவே இத்தொழிலை நாம் தொடங்கினால் நல்ல வருமானத்தை பெறலாம். பொதுவாக இக்காலத்தில் எதன் தேவை அதிகமாக இருக்கிறதோ அத்தொழிலை செய்தால் எளிதில் வெற்றி பெறலாம். அந்த வகையில் இரு சக்கர வாகனங்களுக்கு தேவைப்படும் உதிரிபாகங்கள் (Spare Parts) கடையை வைத்தால் நல்ல வருமானம் பெறலாம்.

எனவே Two Wheeler Spare Part தொழிலை எப்படி தொடங்குவது.? அதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் போன்ற விவரங்களை பின்வருமாறு தொகுத்துள்ளோம். எனவே நீங்கள் ஒரு சுயதொழில் தொடங்க நினைத்தால் இப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

Spare Parts Business Ideas in Tamil:

 how to start 2 wheeler spare parts business in tamil

இருசக்கர வாகன உதிரி பாகங்கள் கடையை தொடங்குவதற்கு முன், அனைத்து மாடல்களில் உள்ள பைக் மற்றும் ஸ்கூட்ர்களின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். 

தேவையான இடம்: 

இருசக்கர வாகன உதிரி பாகங்கள் கடையை தொடங்குவதற்கு தோராயமாக 500 சதுர அடி அளவில் உள்ள ஒரு இடம் இருந்தால் போதும். இத்தொழிலை நீங்கள் பெரிய அளவில் செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு பெரிய அளவிலான இடம் தேவைப்படும்.

தேவையான பணியாளர்கள்:

இத்தொழிலில் பணியாற்ற குறைந்தபட்சம் 2 பணியாளர்கள் தேவை. அதுமட்டுமில்லாமல் இருசக்கர வாகன உதிரி பாகங்களை விவரங்களை பற்றி அறிந்த  பணியாளர்களாக இருத்தல் அவசியம்.

கடையை திறந்தால் போதும் 1 மணிநேரத்தில் 1,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய தொழில்.

தேவையான முதலீடு:

கடைக்கான  வாடகை தொகை இடத்திற்கு இடம் மாறுபடும். எனவே கடைக்கான மாத வாடகையானது தோராயமாக 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரத்திற்கு மேல் இருக்கலாம். மேலும் உதிரி பாகங்கள் வாங்குவதற்கு தோராயமாக 1 லட்சம் தேவைப்படும். 

அதுமட்டுமில்லாமல், பணியாளர்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகள் அனைத்தையும் சேர்த்து 1,50,000 ரூபாய் முதலீடாக தேவைப்படும்.

தேவையான ஆவணங்கள்:

  • கடை மற்றும் நிறுவன சான்றிதழ் (Shop and Establishment certificate)
  • ஜிஎஸ்டி பதிவு (GST Registration)
  • தனி உரிமையாளர் பதிவு (Sole Proprietorship registration)

உதிரி பாகங்களை வாங்கும் முறை:

உங்கள் பகுதியில் உள்ள டீலர்கள் அல்லது மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து உதிரி பாகங்களை வாங்கி கொள்ளலாம். இக்காலத்தில் போலியான தயாரிப்புகள் அதிகம் உள்ளதால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவது நல்லது. 

சுத்தம் செய்தால் மட்டும் போதும் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

இத்தொழிலில் எவ்வளவு லாபம் பெறலாம்.?

இக்காலத்தில் இருசக்கர வாகன உதிரி பாகங்களின் தேவை அதிகமாக உள்ளதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5000 ரூபாய் வரை வருமானம் பெறலாம். 

மேலும், இத்தொழிலில் தோராயமாக 15% முதல் 20% வரை லாபத்தை எதிர்பார்க்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2023