குறைந்த முதலீட்டில் அதிக லாபம்
வணக்கம் நண்பர்களே..! முதலில் தொழில் தொடங்கும் போது குறைந்த முதலீட்டில் தொடங்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள். அதுபோல அந்த தொழில் அதிக லாபத்தை தருவதாக இருக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள். இந்த இரண்டிற்கும் பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவு இருக்கிறது. இன்றைய வியாபாரம் பதிவில் முதலீடு வெறும் 1,000 ரூபாய் இருந்தால் போதும் தினமும் நீங்கள் தாறுமாறாக சம்பாதிக்க என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். வாங்க நண்பர்களே பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்வோம்.
லாபகரமான தொழில்:
இன்றைய நவீன காலத்தில் மிகவும் டிமாண்ட் உள்ள தொழில்களில் Walnut Shell Powder Business-ம் ஒன்றாக இருக்கிறது. இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு 1,000 மட்டும் போதும். அதுமட்டும் இல்லாமல் மிஷின் இல்லாமல் இந்த தொழிலை செய்யலாம்.
மூலப்பொருள்கள்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு வால்நெட் 3 கிலோ மற்றும் தயார் செய்த பவுடரை Paking செய்வதற்கு zip Lock Pouch வாங்கி கொள்ள வேண்டும். வால்நெட் மற்றும் zip Lock Pouch இரண்டையும் நீங்கள் பெரிய கடைகள் மற்றும் Online மூலமும் வாங்கி கொள்ளலாம்.
1 கிலோ வால்நெட்டின் விலை 10 முதல் 25 ரூபாய் வரை ஆகும். zip Lock Pouch-ன் விலை 199 ரூபாய் ஆகும்.
தேவைப்படும் இடம்:
இந்த தொழிலை செய்வதற்கு பெரிய கடையோ அல்லது பெரிய இடமோ தேவையில்லை. வீட்டில் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள வால்நெட் மேல் உள்ள தோலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த வால்நெட்டை நன்றாக காய வைத்து விடுங்கள்.
வால்நெட் நன்றாக காய்ந்தவுடன் உங்கள் வீட்டில் இருக்கும் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு மிக்சி ஜாரில் உள்ள Walnut Shell Powder சிறிது நேரம் காய வைத்து விடுங்கள்.
இப்போது நீங்கள் தயார் செய்த அந்த பவுடரை 100 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு zip Lock Pouch-ல் போட்டு நிரப்பி கொள்ளுங்கள். இது மாதிரி ஒவ்வொரு பாக்கெட்டிலும் நிரப்பி கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
100 கிராம் வால்நெட் பவுடரின் விலை 165 ரூபாய் ஆகும். ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 10 வால்நெட் பவுடர் விற்பனை செய்தால் 1,650 ரூபாய் தினசரி வருமானம் பெற முடியும்.
மேலும் நீங்கள் விற்பனைக்கு ஏற்றவாறு லாபம் பெறலாம். அதுபோல விற்பனை அதிகமாகிவிட்டால் கிலோ கணக்கிலும் நீங்கள் வால்நெட் பவுடர் விற்பனை செய்யலாம்.
Walnut Shell Powder பெரிய ஷாப்பிங் மால், பேன்சி ஸ்டோர், மெடிக்கல் ஷாப் மற்றும் நாட்டு மருந்து கடை ஆகிய இடங்களில் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் விற்பனை செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
பேக்கிங் செய்வதன் மூலம் தினமும் ரூ.1200 வரை சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |