குறைந்த அளவு முதலீடு செய்தால் போதும் அதிக வருமானம் பெறலாம்..!
வணக்கம் அன்பான நேயர்களே… நாம் இன்றைய பதிவில் ஒரு சிறந்த மற்றும் அருமையான தொழில் பற்றி தான் பார்க்கப்போகிறோம். அனைவரின் வாழ்க்கையிலும் வேலை என்பது மிகவும் முக்கியமான ஓன்று. பணம் என்பது நம் அனைவரின் வாழ்விலும் அடிப்படை தேவையாக இருக்கிறது. பணம் இல்லையென்றால் இவ்வுலகமே இயங்காது என்றும் கூட சொல்லலாம். அப்படி இருக்கும் பணத்தை எப்படி சம்பாதிப்பது. யாரிடமும் கையேந்தாமல் சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க. இன்று நம் பதிவில் தண்ணீர் கேன் பிசினஸ் தொடங்கி அதன் மூலம் லாபம் பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்
தண்ணீர் கேன் வியாபாரம்:
தண்ணீர் நம் அனைவரின் வாழ்க்கையிலும் எவ்வளவு முக்கியமான ஓன்று என்பது எல்லோருக்கும் தெரியும். தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வது என்பது மிகவும் கடினமான ஓன்று. அப்படி முக்கியமான ஒன்றாக இருக்கும் தண்ணீர் மூலம் தொழில் தொடங்கி நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
இதனால் நல்ல வருமானமும் கிடைக்கும். இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தே தொடங்கி தினமும் நல்ல வருமானம் பெற முடியும். இந்த தண்ணீர் கேன் பிசினஸ் தொடங்குவதற்கு குறைந்த முதலீடு செய்தால் போதும் தினமும் அதிகளவு லாபம் பெற முடியும். அனைத்து ஊர்களிலும் தண்ணீர் கேன் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.
அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ள ஒரு சிறந்த தொழிலாக இந்த தண்ணீர் கேன் வியாபாரம் உள்ளது. நகர்ப்புற பகுதிகளில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இந்த கேன் தண்ணீரை தான் பயன்படுத்துகிறார்கள்.
நீங்களும் வாழ்வில் முன்னேற அருமையான தொழில்..! |
அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்றவற்றிலும் கேன் வாட்டர் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீர் கேன் பிசினஸ் முதலீடு எவ்வளவு:
இந்த தண்ணீர் கேன் பிசினஸ் தொடங்குவதற்கு ரூ. 10,000 /- முதலீடு செய்தால் போதும். தினமும் அதிகளவு லாபம் பெறலாம்.
தண்ணீர் கேன் பிசினஸ் தொடங்குவது எப்படி..?
- இந்த தண்ணீர் கேன் தொழில் தொடங்குவதற்கு சில மூலப் பொருட்கள் தேவை.
- தண்ணீரை சுத்தம் செய்வதற்கு சில வகையான கெமிக்கல்கள் தேவை.
- தண்ணீர் கேன் தொழில் தொடங்குவதற்கு தண்ணீர் நிரப்ப ஒரு அறையும், அதன் சுத்தத் தன்மையை ஆராய ஒரு பரிசோதனைக் கூடமும் மற்றும் ஆரோ பிளான்ட் சுத்தம் செய்ய ஒரு அறையும் தேவைப்படும்.
- இந்த தொழில் தொடங்குவதற்கு மின்சாரம் 21-30 ஹெச்.பி. மின்சாரம் வரை தேவைப்படுகிறது.
- இந்த கேன் வாட்டர் தொழில் தொடங்குவதற்கு கண்டிப்பாக 2,000 சதுர அடி கொண்ட கட்டிடம் தேவைப்படும்.
- அதுமட்டுமில்லாமல், கட்டடத்தில் பல விதமான பணிகளை செய்வதற்கு தனித்தனியே அறைகள் இருக்க வேண்டும்.
- இந்த தொழில் தொடங்குவதற்கு ISO தரச்சான்று பெற்றிருக்க வேண்டும்.
தண்ணீர் கேன் பிசினஸ் தொடங்க தேவையான இயந்திரங்கள் என்ன:
- மண்ணை சுத்தப்படுத்தும் இயந்திரம் – சாண்ட் ஃபில்டர்
- ஆக்டிக் கார்பன் ஃபில்டர்
- மைக்ரான் ஃபில்டர்
- ஆர்.ஓ.யூனிட்
- தண்ணீர் சேகரித்து வைக்கும் டேங்க்
- ஒஸ்னேட்டர், புறஊதாக் கதிர்கள் சிஸ்டம்
வருமானம் எவ்வளவு:
குறைந்த முதலீட்டில் இந்த தொழில் தொடங்கி மாதம் ரூ. 30,000 வரை நல்ல லாபம் பார்க்கலாம். இன்றைய நிலையில் இந்த தொழில் தொடங்கி நீங்களும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |