வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நறுமண பயிரான கிராம்பு சாகுபடி முறை..! Clove Cultivation..!

Updated On: October 8, 2021 11:02 AM
Follow Us:
கிராம்பு சாகுபடி
---Advertisement---
Advertisement

நறுமண பயிரான கிராம்பு சாகுபடி முறை..!

Clove Cultivation:- கிராம்பு ஒரு நறுமணம் நிறைந்த பொருள் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இது அதிகமாக அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கிராம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால், சித்த மருத்துவங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இத்தனை பயன்கள் நிரம்பிய கிராம்பினை விவசாயிகள் பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்.

சரி இந்த பதிவில் கிராம்பு சாகுபடி செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு நாம்  தெரிந்து கொள்வோம் வாங்க.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

Clove Cultivation – கிராம்பு சாகுபடி முறை:

கிராம்பு ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். நல்ல வெதுவெதுப்பான ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் கிராம்பு நன்கு வளரும் தன்மை கொண்டது.

Clove Cultivation – மழையளவு:

கிராம்பு சாகுபடி பொறுத்த வரை ஆண்டுக்கு மழையின் அளவு 150 செ.மீ இருந்து 200 செ.மீ தேவைப்படுகிறது.

Clove Cultivation – வெப்பநிலை:

கிராம்பு சாகுபடி பொறுத்த வரை வெப்பநிலை 20-30 டிகிரி செல்சியஸ் இருக்கும் நிலத்தில் கரும்பு சங்கு வளரும்.

கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் வரை கிராம்பு செடி நன்கு வளரும். அதாவது மலைப்பகுதிகளில் கிராம்பு செடிகள் நன்கு வளரும்.

Clove Cultivation – நிலம்:

கிராம்பு சாகுபடி பொறுத்தவரை நன்கு வடிகால் வசதி உள்ள மணல் கலந்த களிமண் இதன் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.

Clove Cultivation – நடவு:

கிராம்பு சாகுபடி பொறுத்தவரை முதலாவதாக மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதைகளை 2 செ.மீ. இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். விதைகள் முளைத்து நான்கு அல்லது ஐந்து இலைகள் வரும் வரை நிழலில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பத்து முதல் பதினைந்து நாட்களில் எல்லா விதைகளும் முளைத்துவிடும். முளைத்த விதைகளைச் சிறிய பாலிதீன் பைகளில் ஒரு பைக்கு ஒன்று வீதம் நடவு செய்ய வேண்டும்.

ஓர் ஆண்டுக்குப்பிறகு மீண்டும் நாற்றுக்களைப் பெரிய பாலிதீன் பைகளுக்கு மாற்றி நடவு செய்ய வேண்டும்.

18 முதல் 24 மாத வயது உடைய நாற்றுக்களை ஆறு மீட்டர் இடைவெளி விட்டு 75 x 75 x 75 செ.மீ. குழிகளில் நடவேண்டும். பருவகால மழை தொடங்கிய உடன் நாற்றுக்களை நடவு செய்து கொள்வது நலமாகும்.

நிழலில் வளரக்கூடிய இந்தப் பயிரை, தென்னை, காப்பி, தேயிலை ஆகிய பயிர்களின் இடையில் ஊடுபயிராகவும் பயிர் செய்யலாம்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..! Malligai Poo Valarpu in Tamil..!

Clove Cultivation – உரங்கள்:

ஒரு வயது நிரம்பிய இளம் செடிகளின் விஷயத்தில் செடி ஒன்றுக்கு 15 கிலோ மக்கிய தொழு உரம், 20 கிராம் தழைச்சத்து, 20 கிராம் மணிச்சத்து, 60 கிராம் சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இடவேண்டும்.

ஏழு வயதான மரத்திற்கு 50 கிலோ தொழு உரம், 300 கிராம் தழைச்சத்து, 300 கிராம் மணிச்சத்து, 960 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும்.

நீர் மேலாண்மை:

மழை இல்லாத காலகட்டங்களில் இளம் செடிகளுக்குத் தேவை ஏற்படுகின்றபொழுது தண்ணீர் பாய்ச்சுவது அவசியமாகும். வளர்ச்சிபெற்ற மரங்களுக்கு அவ்வப்போது நன்கு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காய்ப்புத்திறன் அதிகமாகும்.

களை நிர்வாகம்:

கிராம்பு மரத்தில் அடர்ந்து வளர்ந்த, பக்கவாட்டுக் கிளைகளில் சிலவற்றைக் கவாத்து செய்ய வேண்டும். மரத்தைச்சுற்றி களை எடுத்து, காய்ந்த இலைச் சருகுகளை மேலாகப்பரப்பி, மண்ணின் ஈரத்தன்மையைக் காக்க வேண்டும்.

கிராம்பு சாகுபடி – அறுவடை:

நான்காவது ஆண்டிலிருந்து அறுவடை செய்யலாம். பூக்கள் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தோன்றத் தொடங்கும்.

பூ பூத்த ஆறு மாதங்களில் பூ மொக்குகள் பச்சை நிறத்திலிருந்து இளம் சிவப்பு நிறமாக மாறும். அச்சமயம் பூக்கள் இதழ் விரியத் தொடங்குவதற்கு முன்பு பறித்துவிட வேண்டும். கொத்து கொத்தாகத் தோன்றும் எல்லா மொட்டுகளையும் அறுவடை செய்ய வேண்டும்.

அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!

கிராம்பு சாகுபடி  – மகசூல்:

அறுவடை செய்த அடுத்த நாள் இளம் வெயிலில் ஆறு நாட்கள் நன்கு உலரும் வரை காயவைக்க வேண்டும். மரம் ஒன்றுக்கு மூன்று கிலோ வரை உலர்ந்த கிராம்பு மகசூலாக கிடைக்கும்.

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Tulsi Plant Fertilizer Homemade in Tamil

இந்த உரத்தை போட்டால் காய்ந்த துளசி செடி கூட ஒரே வாரத்தில் தளதளவென்று செழித்து வளரும்.!

இயற்கை விவசாயம் – பிளம்ஸ் பழம் சாகுபடி..!

ஊடுபயிர் விவசாயம்

ஊடுபயிர் விவசாயம் | எந்த பயிரில் என்ன ஊடுபயிர்? | Intercropping advantages

Kohlrabi cultivation

நூக்கல் வளர்ப்பு மற்றும் நூக்கல் பயன்கள்..!

சோயா மொச்சை சாகுபடி

இயற்கை விவசாயம் சோயா மொச்சை சாகுபடி முறை..!

How to Grow Garlic Plant at Home in Tamil

ரொம்ப ஈஸியா இனி வீட்டிலேயே பூண்டு செடி வளர்க்கலாம்!!! How to Grow Garlic Plant at Home in Tamil

Guava Tree Fertilizer in Tamil

காய்க்காத கொய்யா மரமும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு உரம் மட்டும் போதும்..!

குச்சியாக இருக்கும் ரோஜா செடி கூட 3 நாட்களில் துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இந்த ஒரு கரைசல் போதும்..!

Fertilizer For Kakkattan Plant in Tamil

காக்கட்டான் செடி அதிகமா பூக்க இந்த உரம் மட்டும் போதும்..!