மா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..!

மா சாகுபடி முறைகள்

மா சாகுபடி முறைகள் தெளிவான விளக்க உரை(Mango tree cultivation in tamil)..! 

இன்று இயற்கை விவசாயத்தில் மா சாகுபடி முறையை பற்றி தெரிந்து கொள்வோம். அதாவது மா சாகுபடி முறையில் மாசாகுபடிக்கு ஏற்ற ரகங்கள், தட்பவெப்ப நிலைகள், மா சாகுபடிக்கு ஏற்ற பருவகாலம், மா சாகுபடி முறையில் பூச்சி தாக்குதல்களை எப்படி கட்டுப்படுத்துவது, அறுவடை போன்ற விவரங்களை இப்போது நாம் இந்த பகுதியில்  தெரிந்து கொள்வோம் வாங்க..!

ஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..!

இயற்கை முறையில் மா சாகுபடி முறைகள் (Mango tree cultivation in tamil)

ரகங்கள்:

மா சாகுபடி முறைகள் பொறுத்தவரை இமாம்பசந்த், அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா, பெங்களூரா மற்றும் காலப்பாடி, இது போன்று பல்வேறு ரகங்களை நடவு செய்வதால், ஆண்டு முழுவதும் நமக்கு அறுவடை இருக்கும்.

வீரிய ஓட்டு ரகங்கள்:

மா சாகுபடி முறைகள் பொறுத்தவரை பெரியகுளம் –1, மல்லிகா, அமரப்பாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து சேலம், பெங்களூரா.

நிலம் மற்றும் தட்பவெப்ப நிலை:

மா சாகுபடி முறைகள் பொறுத்தவரை நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம். மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும் மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும்.

மா நட, ஜூலை முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவமாகும்.

நிலம் மேலாண்மை:

மா சாகுபடி முறைகள் பொறுத்தவரை நிலத்தை நன்கு உழுது பின்பு 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர் வெட்டவும்.

பின்னர் குழி ஓன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 100 கிராம் லின்டேன் உடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும்.

மா நடவு முறை:

இந்த மா சாகுபடி பொறுத்தவரை ஓட்டுச் செடிகளை குழிகளின் மத்தியில் நட வேண்டும்.

செடிக்குச்செடி 6 முதல் 10 மீட்டர் வரை இடைவெளி விட வேண்டும். அடர் நடவு முறையினை  அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற ரகங்களில் பின்பற்றலாம்.

செடிகள், நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

மேலும் பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ உரமிட வேண்டும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

உரங்கள்:

மா சாகுபடி முறைகள் பொறுத்தவரை உரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப் பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு பின் அவற்றை மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு இட வேண்டிய சத்துக்கள் (கிலோ ஒரு மரத்துக்கு) முதல் வருடத்துக்கு தழை சத்து 0.2, மணி சத்து 0.2, சாம்பல் சத்து  0.3, 6 வருடங்களுக்குப் பிறகு தழை 1, மணி 1, சாம்பல் 1.5. காம்ப்ளக்ஸ் 10:26:26 அளவிலும் இட வேண்டும்.

யூரியா இட வேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்துக்கு) முதலாம் ஆண்டும், வருடந்தோறும் காம்ப்ளக்ஸ் 12, யூரியா 0.2, 6 வருடங்களுக்குப் பிறகு காம்ப்ளக்ஸ் 4.0, யூரியா 1.3, பொட்டாஷ் 0.840.

களை நிர்வாகம்:

மா சாகுபடி முறைகள் பொறுத்தவரை வருடத்துக்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும் வளரவிட வேண்டும்.

பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்க என்.ஏ.ஏ. என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு மில்லி மருந்தை 50 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சதவீதம் யூரியா கரைசல் அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.

பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த:

மா சாகுபடி முறைகள் பொறுத்தவரை ஏக்கருக்கு பாசலோன் 35 இசி 1.5 மிலி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து கிளைகள் தண்டுகள் மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

அல்லது கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் 2 கிராமுடன் 2 கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து மரம் பூக்க ஆரம்பிக்கும் காலத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

அசுவினி செதில் பூச்சி, தண்டு துளைப்பான், பழம் ஈ, சாம்பல் நோய், இலைப்புள்ளி, கரும்பூஞ்சாண் நோய் போன்றவற்றுக்கும் அதிகாரிகள் பரிந்துரைகளின்படி மருந்துகள் தெளிக்க வேண்டும்.

அறுவடை காலங்கள்:

மா சாகுபடி முறைகள் பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை அறுவடை செய்யலாம். ரகத்துக்கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் மகசூல் வேறுபடும்.

தேங்காய் நார் கழிவில் செழிக்குது செடிகள்!!!

 

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>இயற்கை விவசாயம்