தேங்காய் நார் கழிவில் செழிக்குது செடிகள்!!!

Advertisement

தேங்காய் நார் கழிவில் செழிக்குது செடிகள்!!!

ஆண்டுக்கு இரு பருவ மழை, எப்போதும் சூரிய ஒளி, அனைத்து வகை மரம் செடி கொடிகளும் உயிரினங்களும் வளரக்கூடிய சூழல், சுழற்றியும் தழுவியும் செல்லும் காற்று, உள்ளம் குளிர வைக்கும் பனி என்று இயற்கை நமக்கு அளித்த வரங்கள் ஏராளம். செம்மண், கரிசல், வண்டல் என மண் வளமும் தாராளம். இவற்றை நாம் முழுதாக பயன் படுத்துவதில்லை என்பதே உண்மை.

மண் வளம் குறைந்த, கடுங்குளிர் கொண்ட வெளிநாடுகளில் எப்படி விவசாயம் நடக்கிறது? அதிலும் குறிப்பாக ஹாலந்தில்தான் உலகிலேயே அதிக அளவு மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எப்படி? அவர்கள் மண்ணுக்கு பதிலாக பயன்படுத்தும் பொருள்தான் முக்கிய காரணம். அந்தப் பொருளும் நம் நாட்டில் இருந்தே அதிக அளவு ஏற்றுமதி ஆகிறது. ஆம்… நாம் தினந்தோறும் சமையலுக்குப் பயன்படுத்தும் தேங்காய் தான் அந்த பொருள். தேங்காய் நார் துகள்கள்தான் அங்கு விவசாயத்துக்குப் பயன்படுகின்றன!

தேங்காய், தேங்காய் நார் மற்றும் தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் காயிர் சிப்ஸ் மற்றும் காயிர் பித். காயிர் சிப்ஸ் என்பது தேங்காய் மட்டையை சிறுதுண்டுகளாக வெட்டுவது, காயிர் பித் என்பது நாரிலிருந்து விழும் கழிவு. இவை இரண்டும் விவசாயத்துக்குப் பயன்படுகிறது. தேங்காய் நார் துகளை உலர வைத்து, செங்கல் போன்று தயாரிக்கப்படுகிறது. இந்த செங்கல்லை உதிர்த்து தண்ணீரில் ஊற வைத்தால் 5 மண் தொட்டிகள் அளவு கிடைக்கும். இயற்கையாகவே அதிகம் உரம் தேவைப்படாது. தண்ணீரின் தேவையும் மிகக்குறைவு.

உங்கள் மாடிதோட்டத்தில் இன்று ரோஜா பயிரிடலாம் வாங்க…!

காயிர் பித் (மண்ணுக்கு மாற்று) (coco peat benefits) பயன்படுத்துவதால் என்ன பயன்?

1. சத்துகளை செடி உறிஞ்சும் அளவு (coco peat benefits) அதிகரிக்கும்.
2. குறைந்த அளவு உரம் (coco peat benefits) போதுமானது.
3. வறட்சியை தாங்கும் சக்தி (coco peat benefits) அதிகரிக்கும்.
4. குறைந்த அளவு நீர் (coco peat benefits) போதுமானது.
5. மண்ணில் நன்மை தரும் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரிக்கும்.
6. முளைப்புத்திறன் கூடுவதால் அதிக நாற்றுகள் கிடைக்கும்.
7. வேர் வளர்ச்சி (coco peat benefits) அதிகரிக்கும்.
8. செடிகள் ஆரோக்கியமாகவும் பசுமையாகவும் (coco peat benefits) காணப்படும்.

காயிர் பித் பயன்படுத்துவது எப்படி ?

செங்கல் போல கட்டிகளாக கிடைக்கும் இவற்றை பெரிய பக்கெட்டில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வைத்தால், நன்கு ஊறி உதிராக மண் போல மாறும்.

பெரிய தேங்காய் மட்டை சிலவற்றை தொட்டியின் அடியில் போடவும்.

அதன் மேல் சிப்ஸ் எனப்படும் சிறிய துண்டுகளாக வெட்டிய தேங்காய் மட்டையை பாதி நிரப்பவும். இவை கிடைக்காவிட்டால் பொடி நார் கழிவே போதும்.

இத்துடன் ஈ.எம். கரைசல், ‘வேம்’ பூஞ்சானம், ஹுயுமிக் அமிலம் மற்றும் மண்புழு உரம் சேர்த்து கலந்து தொட்டியின் அளவுக்கு நார்கழிவை நிரப்பவும்.

இனி விதை நட வேண்டியதுதான். மண் போன்று தண்ணீரை தேக்கி வைக்கும் தன்மை அதிக அளவில் இல்லாததால், குறைந்த அளவு தண்ணீர் தெளித்தாலே போதும். இருவேளை தண்ணீர் விடவேண்டிய அவசியம் இல்லை.

உருளைக்கிழங்கில் கூட ரோஸ் செடி வளர்க்கலாம் தெரியுமா உங்களுக்கு..!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய மேலும் விவரங்ககை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement