சொட்டு நீர் பாசனம் முறையில் பூசணி சாகுபடி..!

Advertisement

பூசணி சாகுபடி முறை:

சொட்டு நீர் பாசனம் முறையில் பூசணி காய் பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் மகசூல் பற்றிய விவரங்களை இப்போது நாம் காண்போம்.

பயிரிடும் முறை:

கொடி வகை பயிர் என்பதால் இவற்றை ஜூன், ஜூலை, ஜனவரி மற்றும் பிப்ரவரி போன்ற மாதங்களில் பயிரிடுவதற்கு ஏற்ற பருவகாலம் ஆகும்.

சாகுபடிக்கு தயாராக இருக்கும் நிலத்தில் 6 அடிக்கு 6 அடி ஆழத்திற்கு பார் அமைத்து கொள்ள வேண்டும்.

பார் அமைத்த பிறகு அவற்றில் சாண எரு மற்றும் கோழி எரு ஆகியவற்றை கலந்து பார்களின் மீது தெளித்து விட வேண்டும். அதன் பிறகு பார்களின் மீது வேலையாட்களை கொண்டு மண் அணைக்க வேண்டும்.

அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!

மண் அணைத்த பிறகு பார்களின் மேல் சொட்டு நீர் பைப்புகளை அமைத்து கொள்ள வேண்டும். குறிப்பாக 1 1/2 அடிக்கு 1 1/2 அடி ட்ரிப்பர் இருக்கும். பைப்புகளை தேர்வு செய்து சொட்டு நீர் பைப்புகளை அமைத்து கொள்ள வேண்டும்.

பைப்புகள் அமைத்த பிறகு மல்ஜிங் சீட் மூலமாக பார்களை மூடிவிட வேண்டும்.

அதன் பிறகு வேலையாட்களை கொண்டு பார்களின் மீது ஓட்டை இட்டுக்கொள்ள வேண்டும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

இப்போது செடிகளை எப்படி நடுவது என்பதை பற்றி நாம் காண்போம்.

18 முதல் 20 நாட்கள் வயது உள்ள நாற்றுகளை 6 அடிக்கு 6 அடி இடைவெளிகள் கொண்ட பார்களில், 1 1/2 அடிக்கு 1 1/2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடும்போது, ஏக்கருக்கு 5000 நாற்றுகள் தேவைப்படும்.

ஒரு செடியில் 6 காய்கள் என்ற விகிதத்திற்கு ஏக்கருக்கு 30 டன் பூசணி காய்களை மகசூலாக பெற இயலும்.

நாற்றுகளை நட்டவுடன் தொடர்ந்து 10 நாட்கள் வரை கண்டிப்பாக தண்ணீர் காலை மற்றும் மாலை வேளைகளில் சொட்டு நீர் பைப்புகள் மூலம் தண்ணீர் விட வேண்டும்.

அதன் பிறகு 10 நாள் கழித்த பிறகு தொடர்ந்து செடிகளுக்கு மருந்து அடித்து கொண்டே இருக்க வேண்டும். (மருந்து எதற்காக அடிக்கின்றோம் என்றால் ஆண் பூக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக பயிர்களுக்கு மருந்து அடிக்க வேண்டும்)

குறிப்பிட்ட நாட்கள் வரை பேட்டரி ஸ்ப்ரே மூலம் மருந்து அடிக்கலாம், பயிர்கள் நன்றாக வளர்ந்த பிறகு, பவர் ஸ்ப்ரே மூலம் தான் மருந்து அடிக்க வேண்டும்.

நடவு செய்த 45 நாட்களில் பயிர்களில் பூக்கள் வைக்க துவங்கி விடும். பூக்களில் ஆண் பூக்கள், பெண் பூக்கள் என இரு வகை உள்ளது. ஆனால் பெண் பூக்களில் மட்டுமே காய்கள் வைக்கும்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது என்றால் மகசூல் அதிகம் பெற இயலும்.

பூக்கள் வைத்த 15 நாட்களில் இருந்த அறுவடைக்கு பூசணி காய்கள் தயாராகி விடும். அதாவது நடவு செய்த 60-வது நாட்களில் முதல் அறுவடை செய்து விடலாம், அதன் பிறகு வரம் ஒரு முறை என்று 10 டன் பூசணி காய்களை அறுவடை செய்ய முடியும்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்
Advertisement