கோழி முட்டை அடை வைப்பது எப்படி..! How To Chicken Eggs Hatch..!

Chicken Egg Hatching Days

கோழி முட்டை அடை வைக்க சூப்பர் டிப்ஸ்..! Chicken Egg Hatching Days..!

அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கோழி முட்டையை அடை(Chicken Egg Hatching Days) வைக்கும் முறை எப்படி என்று பார்க்கலாம். கோழி என்றாலே அனைவரின் வீட்டிலும் வளர்க்க கூடிய பறவை ஆகும். கோழி வகைகளில் இரண்டு வகையாக உள்ளது. ஒன்று பெறுவடை, மற்றொன்று சிறுவடை என பிரிக்கப்பட்டுள்ளது. சாதரணமாக 8 முதல் 20 முட்டை அளவிற்கு முட்டையிட கூடிய தன்மை கோழிக்கு உள்ளது. கோழி அதனுடைய தன்மைக்கு ஏற்றவாறு முட்டை இடும். சரி வாங்க கோழி முட்டை அடை வைக்கும் டிப்ஸை இன்று படித்து தெரிந்து கொள்ளலாம்..!

newவீட்டில் உள்ள எலியை விரட்டும் வழிகள்..! Rat killer in tamil..! How to get rid of rats in home ..!

முட்டை அடை வைப்பதற்கு தேவைப்படும் பொருள்:

  • வர மிளகாய் 
  • ஆணி துண்டு 
  • அடுப்பு கறித்துண்டு 
  • தண்ணீர் 
  • மணல் அல்லது வைக்கோல்
  • அகலமான சட்டி  

கோழி முட்டை அடை வைக்க இடம் ரெடி செய்யும் முறை:

கோழி முட்டை அடை வைக்க முதலில் அகலமான சட்டியில் மணலை கொட்டி தடவவும். மணல் வெப்பம் இல்லாத அளவிற்கு இருக்க வேண்டும். அடுத்து மணல் சட்டியில் ஏதேனும் இரும்பு துண்டு வைக்க வேண்டும்.

கோழி அடை இருக்கும் நேரத்தில் எறும்பு தொல்லை வராமல் இருக்க மிளகாய், கரித்துண்டு வைக்கவும். அடுத்ததாக அடை வைக்க போகும் முட்டையை இந்த சட்டியில் வைக்கவும்.

கோழி முட்டையிடும் வகை:

கோழிகளில் சிறுவடை, பெறுவடை என்று இரண்டு வகையான கோழிகள் உள்ளன. அதில் சிறுவடை கோழியானது 18 முட்டை முதல் 20 முட்டை வரை இடும் தன்மை உடையது. பெறுவடை கோழியானது 8 முதல் 14 முட்டை அளவிற்கு முட்டையிடும் தன்மை பெற்றுள்ளது.

முட்டை அடை வைக்கும் முறை:

இப்போது தண்ணீரில் அடை வைக்க போகும் கோழியின் முட்டையை போடவும். அடை வைப்பதற்கு தகுதியுள்ள முட்டை நீரின் கீழ் இருக்கும். அடை வைக்க முடியாத முட்டை அதாவது ரொம்ப பழைய முட்டையானது தண்ணீருக்கு மேல் வந்து விடும்.

பழைய முட்டையை அடை வைப்பதினால் எல்லா முட்டையுடன் இந்த பழைய முட்டை பொறித்து வராது. இதனால் கோழி அந்த முட்டையில் 20 நாட்கள் முழுமையாக அடை காத்து வராது.

இப்போது தண்ணீரில் போட்ட முட்டையை, முட்டையில் நீர் இல்லாத அளவிற்கு நன்றாக துடைத்து அடை வைக்க போகும் கோழி கூடையில் வைக்க வேண்டும். முட்டை அடை வைக்கும் போது கோழி வெளியில் சென்று வரும் அளவிற்கு கூடையானது இருக்க வேண்டும்.

கோழிக்கு அடை நேரத்தில் உணவு அவசியம்:

அடை இருக்கும் காலத்தில் கோழிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருக்கும். கோழிக்கு இந்த நேரத்தில் உணவு வகையான தீனி, தண்ணீர் ரொம்பவே முக்கியமாக வைக்க வேண்டும்.

newதண்டு கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

அடையின் காலத்தில் இடமாற்றம்:

இந்த உணவுகளை கோழியானது 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறைதான் எடுத்துக்கொள்ளும். கோழியின் அடை இடத்தை மாற்றி வைத்தால் கோழி அடைக்கு வராமல் சென்றுவிடும்.

அடை இடத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அதை பகல் நேரத்தில் செய்யாமல் இரவு நேரங்களில் செய்து கோழியை கூடையினால் மூடி வைக்கவும். அடுத்த நாள் அதே இடத்தில் கோழி அடை காக்கும்.

கால நிலை:

வெயில் காலத்தின் போது நாம் கோழியை அடை வைக்கும் போது தவறாமல் குளிர்ந்த நிலையில் இருக்கும் இடத்தில்தான் அடை வைக்க வேண்டும். குளிர்ந்த நிலையில் இருந்தால் கோழியானது நன்கு அடை காத்து வரும்.

வெப்ப நிலையில் இருக்கும் போது அடை கோழி சூடு தாங்காமல் வெளியில் சென்றுவிடும். அடையை ஒழுங்காக காத்து வராது.

முட்டை பொறிக்கும் திறன்:

சிறுவடை கோழிக்கு முட்டை பொரிக்கும் திறன் அதிகமாவே இருக்கின்றது. சாதாரணமாக ஒரு கோழிக்கு 15 முதல் 18 முட்டை வரை அடை வைக்கலாம். அதுமட்டும் இல்லாமல் வேற கோழியின் முட்டையை கூட அடை வைக்க போகும் கோழியோடு சேர்த்து அடை வைக்கலாம்.

அடை வைத்த கோழி முட்டையானது ஒவ்வொன்றாக தான் பொறித்து வரும். வேற கோழியின் முட்டையை அடை வைத்து பொறித்து வரும்போது இரவு நேரத்தில் பொறுமையாக எடுத்து வெளியில் விடவேண்டும். வெளியில் விட்ட பிறகு அந்த கோழி தனது குஞ்சியை பாதுகாத்து கொள்ளும்.

வெயில் நேரங்களில் அடை கோழியானது பாதியாக நின்ன நிலையில் அடை காத்து கொண்டிருக்கும். வெயில் நேரத்தில் கோழிக்கு எந்த அளவிற்கு வெப்பம் கொடுக்க வேண்டும் என்று தெரியும்.

newவிவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள்..! Livestock loans..!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்