கத்தரிக்காய் செடி வருடம் முழுவதும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு பொருள் போதும்..!

Brinjal Growing Tips in Tamil

பெரும்பாலான வீடுகளில் கத்தரிக்காய் செடி வளர்த்து வருவோம். ஆனால் சில கத்தரிக்காய் செடி வளர்வதற்கு அதிக காலம் எடுத்து கொள்ளும். அப்படி விரைவில் வளர்ந்து பூ வைத்தாலும் காய்கள் வைக்காமல் பூ உதிர்ந்து விடும். எனவே இப்பிரச்சனைகள் அனைத்தையும் தடுத்து எப்படி கத்தரிக்காய் செடியை கொத்து கொத்தாக காய்க்க வைப்பது என்று தெரிந்து கொள்வோம். அதுமட்டுமில்லாமல் கத்தரிக்காய் செடியை வருடம் முழுவதும் தொடர்ந்து காய்க்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

How To Get More Brinjal From Plant in Tamil:

 how to grow brinjal plant at home in tamil

டிப்ஸ் -1

முதலில் கத்தரிக்காய் செடிக்கு எறும்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும். கத்தரிக்காய் செடியில் எறும்பு வந்தால் செடியின் வளர்ச்சியை குறைத்து காய்கள் வைப்பதை தடுத்து விடும். எனவே கத்தரிக்காய் செடியில் எறும்பு வந்ததை நீங்கள் அறிந்தால் உடனே கத்தரிக்காய் செடியின் அடி தண்டில் வாசலின் (vaseline) தடவி விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் கத்தரிக்காய் செடியில் எறும்புகள் வராமல் இருக்கும். மேலும் ஏற்கனவே எறும்பு இருந்தால் கூட போய்விடும்.

கருவேப்பிலை செடி மரமாக மாற இதை மட்டும் செய்யுங்க போதும்..

டிப்ஸ் -2

கத்தரிக்காய் செடியில் உள்ள இலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு இலைகளை பிரித்து விட வேண்டும். மேலும், கத்தரி இலையில் ஏதேனும் பூச்சி தாக்குதல் இருந்தால் அந்த இலையை உடனே நீக்கி விட வேண்டும். இல்லையென்றால் இலை பூச்சி ஒரு இலையில் இருந்து மற்ற இலைகளுக்கு படர்ந்து விடும். இதனால் காய்கள் காய்ப்பது நின்று விடும்.

டிப்ஸ் -3

கத்தரிக்காய் செடி கொத்து கொத்தாய் காய்க்க 15 நாட்களுக்கு ஒருமுறை கத்தரிக்காய் செடிக்கு 1 கைப்பிடி அளவிற்கு தொழுவுரம் இட வேண்டும். அப்போது தான் கத்தரிக்காய் ஒரு முறை காய்த்து நின்று விடாமல் தொடர்ந்து காய்த்து கொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு அறுவடைக்கு பின்னும் அதற்கு தேவையான மண் கலவையை இட வேண்டும்.

டிப்ஸ் -4

கத்தரிக்காய் செடி நன்றாக செழிப்புடன் வளர சூரிய ஒளி மிகவும் முக்கியமானது. எனவே கத்தரிக்காய் செடியை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். மேலும் அதற்கு தேவையான தண்ணீரையும் இட வேண்டும்.

டிப்ஸ் -5

 how to grow brinjal plant in tamil

கத்தரிக்காய் செடி பசுமையாக வளரவும், பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கும் மற்றும் கத்தரிக்காய் செடியில் அதிக காய்கள் தொடர்ந்து காய்க்கவும் இந்த ஒரு பொருள் போதும். அது வேறொன்றுமில்லை புளிச்ச மோர் கரைசல் தான்.

இந்த புளிச்ச மோரினை 1/2 லிட்டர் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 10 லிட்டர் தண்ணீரை சேர்த்து கரைசலாக எடுத்து கொள்ளுங்கள். இதனை கத்தரிக்காய் செடியின் தண்டு மற்றும் இலை பகுதியில் தெளித்து விடுங்கள்.

உங்கள் வீட்டில் அதிக அளவில் கத்தரிக்காய் செடி வைத்திருந்தால் இந்த அளவில் புளிச்ச மோர் கரைசலை கொடுங்கள். குறைவாக இருந்தால் இதன் அளவை குறைத்து கொள்ளுங்கள்.

மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை எல்லாம் நீங்கள் பின்பற்றினால் உங்கள் வீட்டு கத்தரிக்காய் செடி வருடம் முழுவதும் காய்த்து கொண்டே இருக்கும்.

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

பூவும், பிஞ்சுமாக இருக்கும் கத்தரிக்காய் செடியில் வரும் பூச்சிகளை விரட்ட இதை செய்யுங்க..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்