How To Grow Capsicum At Home in Tamil
குடைமிளகாய் என்று அழைக்கப்படும் கேப்ஸிகம்ஆனது பயிரிடப்பட்டு விற்பனைப்படுத்தப்படும் ஒன்றாகும். இது பல்வேறு வகையான சமையலுக்கு பயன்படுகிறது. மேலும் இது உணவிற்கு கூடுதல் சுவையை அளிக்கிறது. குடை மிளகாயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் B6 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. குடைமிளகாய் மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி போன்ற இடங்களில் விளையும் செடியாகும். இதனை நம் வீட்டில் எப்படி வளர்ப்பது என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
குடை மிளகாய் செடி வளர்ப்பது எப்படி.?
குடைமிளகாய் வளர்ப்பதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிவை:
கேப்ஸிகம் செடியை 18 C முதல் 35 C வரை வெப்பநிலை உடைய இடத்தில் வைக்க வேண்டும். மேலும், சூரிய ஒளியானது தொடர்ந்து 4 அல்லது 5 மணிநேரம் வரை படும் இடத்தில் வைக்க வேண்டும்.
குடைமிளகாய் மிளகாய் செடியை 12 முதல் 15 இன்ச் இடைவெளியில் நட வேண்டும்.
குடைமிளகாய் வளர்ப்பதற்கு உகந்த காலம் கோடைக்காலம் ஆகும்.
குடைமிளகாய் களிமண் உள்ள இடங்களில் நன்றாக வளரக்கூடியது.
குடைமிளகாய் விதைகளை வாங்கி வந்தோ அல்லது நீங்கள் வாங்கிய குடைமிளகாயில் உள்ள விதைகளை நன்றாக காயவைத்தோ விதைக்கலாம்.
மாடித்தோட்டத்தில் வல்லாரை கீரை வளர்ப்பது எப்படி.
மண்கலவை தயாரித்தல்:
குடைமிளகாய்க்கு களிமண் கலவை நல்லது. இருப்பினும் உங்கள் பகுதியில் என்ன வகை மண் கிடைக்கிறதோ அதனை எடுத்து கொள்ளுங்கள். அம்மண்ணில் மாட்டு எருது, ஆட்டு எருது, மண்புழு உரம் மற்றும் தாவரங்களின் கழிவுகள் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளுங்கள்.
வளர்ப்பு முறை:
இப்போது தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை குரோ பேக்கிலோ அல்லது மண் தொட்டிகளிலோ நிரப்பி கொள்ளுங்கள்.
பின்பு மண் கலவையை நிரம்பியதும் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மண்கலவையை கிளறி விடுங்கள்.
பிறகு, வாங்கி வந்த குடைமிளகாய் விதைகளை மண் தொட்டிகளில் நடவு செய்து கொள்ளுங்கள். ஒரு மண் தொட்டியில் இரண்டு செடிகள் வளருமாறு விதைத்து கொள்ளுங்கள்.
அதன் பின், இதற்கு தண்ணீர் விட வேண்டும். இதனை அடுத்து மூன்றாம் நாள் தண்ணீர் விட வேண்டும். அதற்கு பிறகு மண்ணின் தரத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் விட வேண்டும்.
வீட்டிலேயே புதினா செடி வளர்ப்பது எப்படி..
விதைத்த இரண்டு வாரங்களில் செடி நன்றாக வளர தொடங்கும். விதைத்த இரண்டு மாதங்களில் குடைமிளகாய் அறுவடைக்கு தயாராகிவிடும்.
ஒவ்வொரு அறுவடைக்கு பின்பும் மேலுரமாக தொழுவுரம் இட வேண்டும்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |