கிசான் கடன் அட்டை பெறுவது எப்படி? மற்றும் அதன் பயன்கள்..! / kisan credit card scheme in tamil
Kisan credit card scheme in tamil:- கிசான் கடன் அட்டை என்பது விவசாய கடன் அட்டை என்பதாகும். இவ்வாறு ஒரு கடன் அட்டை இருப்பது பலரும் அறியாத ஒன்றாகும். இதன் நோக்கமே பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலுருந்து பெற்றுத்தருவதே ஆகும்.
சரி இந்த பதிவில் கிசான் கடன் அட்டை பெறுவது எப்படி? கிசான் கடன் அட்டை திட்டத்தின் சலுகைகள் மற்றும் அதன் பயன்கள் போன்றவற்றை இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க.
இதையும் படியுங்கள்—> உர மேலாண்மை டிப்ஸ்..! |
கடன் அட்டை பெறும் வழிமுறைகள்:-
கிசான் கடன் அட்டை பெறுவதற்கு முதலில் அருகில் உள்ள பொதுத்துறை வங்கிகளை அணுக வேண்டும். அவர்கள் உங்களின் பொருளாதாரத்தை அறிந்து கொள்வார்கள். பின் தகுதியுடைய விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் வழங்குவார்கள். இதில் வாங்கியவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம் பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த கணக்கின் மூலம் கடன் வழங்கப்படும்.
கிசான் திட்டத்தின் பலன்கள் / kisan credit card scheme in tamil:-
- ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியான கடனுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.
- விதைகளையும், உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக்கேற்ற வகையில் வாங்கிக்கொள்ளலாம்.
- மூன்று வருடங்களுக்கான கடன் வசதி உண்டு. இதில் பருவகால மதிப்பீடுகள் தேவைப்படுவதில்லை.
- விவசாய வருமானம் அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு. கடன் வரம்பைப் பொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.
- விவசாய கடனுக்கு வழங்கப்படும் அதே வட்டி விகிதம் தான் இதே கடனுக்கும் வழங்கப்படும்.
- அறுவடைக்கு பிறகு பணத்தை திரும்பி செலுத்துதல்.
- விவசாய கடனுக்கு வழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவண நிபந்தனைகள்.
- இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னெவென்றால் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் வாங்க எந்தவித அடமானமும் வைக்க தேவையில்லை.
- இந்த கடன் அட்டையை வைத்துள்ள பயனாளர்களிடமிருந்து வங்கிகள் கடனுக்காக குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது.
- குறைந்த வட்டியில் கடன் வழங்குவதோடு மட்டுமல்லாமல் கடன் அட்டையின் மூலம் கடன் பெற்றுள்ள விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கும் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்—> விவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள்..! |
தனிநபர் விபத்து காப்பீடு திட்டம்:-
இந்த விவசாய கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு என தனிநபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது என்றும் சில தகவல்கள் கூறப்படுகிறது.
நோக்கம்:-
இத்திட்டத்தின் நோக்கம் ஏதாவது விபத்துகளால் உள்நாட்டிற்குள் உண்டாகும் இறப்பு மற்றும் நிரந்தர ஊனம் ஆகியவற்றிற்கான இழப்பீடுகளில் அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் வழங்குவது என்பதாகும் 70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களும் இத்திட்டத்தின் மூலமாக இழப்பீடும் பெறலாம்.
சதுர அடி கணக்கிடுவது எப்படி |
இழப்பீடு விவரங்கள்:-
- விபத்து மற்றும் வன்முறை காரணமாக மரணம் எனில் ரூ.50,000/-
- நிரந்தரமான ஒருமொத்த ஊனம் எனில் ரூ.50,000/-
- இரண்டு கைகள் அல்லது கால்கள் இழப்பு, இரண்டு கண்கள் இழப்பு, அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது கால் இழப்பு எனில் ரூ.50,000/-
- ஏதேனும் ஒரு கை அல்லது கால் அல்லது கண் இழப்பு எனில் ரூ.25,000/- இழப்பீடுகள் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | pasumai vivasayam in tamil |