செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க இதை மட்டும் செய்யுங்கள்..!

Liquid Fertilizer for Plants Homemade in Tamil

Liquid Fertilizer for Plants Homemade in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வீட்டிலும் அழகுக்காகவோ அல்லது இயற்கையின் மீது உள்ள அதிக ஈடுபாட்டினால்  நிறைய வகையான செடிகளை வளர்த்து வருகின்றோம். அப்படி நாம் வளர்க்கும் செடி திடீரென்று ஒரு நாள் பூச்சி தாக்குதலால் பட்டுப் போய்விட்டது என்றால் நமது மனம் மிகவும் வருத்தப்படும்.

அப்படி நாம் வளர்க்கும் செடிகளை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாத்து அவை நன்கு செழிப்பாக வளர உதவும் ஒரு கரைசல் தயாரிப்பது பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள கரைசலை பயன்படுத்தி பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் செடிகள் பசுமையாக வளர்வதற்கு வீட்டிலேயே கரைசல் தயாரிக்கலாம்..!

How to Make Organic Liquid Fertilizer at Home in Tamil:

Liquid Fertilizer Homemade in Tamil

 

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. முருங்கை கீரை – 4 கைப்பிடி அளவு
  2. வேப்பிலை – 4 கைப்பிடி அளவு
  3. மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன் 
  4. தண்ணீர் – தேவையான அளவு

முதலில் ஒரு மிக்கி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள 4 கைப்பிடி அளவு முருங்கை கீரை, 4 கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரிலிருந்து   ஒரு டம்ளர் எடுத்து செடிகளின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள் அல்லது தெளித்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> கருவேப்பிலை செடி கடகடன்னு வளருவதற்கு இந்த ஒரு கரைசல் போதும்..!

Liquid Fertilizer Homemade in Tamil:

How to Make Organic Liquid Fertilizer at Home in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. கடலை புண்ணாக்கு – 1 கிலோ 
  2. வேப்ப புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு 
  3. தண்ணீர் – தேவையான அளவு 

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கிலோ கடலை புண்ணாக்கு மற்றும் 2 கைப்பிடி அளவு வேப்ப புண்ணாக்கு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் 6 லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு துணியை வைத்து பாத்திரத்தின் மீது நன்கு இறுக்கமாக கட்டி கொள்ளுங்கள்.

இதனை இப்படியே ஒரு 7 நாட்கள் வைத்து இருங்கள். பின்னர் அதனை எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரிலிருந்து ஒரு டம்ளர் எடுத்து செடிகளின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள் அல்லது தெளித்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்