லிச்சி பழம் சாகுபடி முறை மற்றும் லிச்சி பழம் நன்மைகள்..! (Litchi Cultivation / Litchi Fruit Benefits)

Advertisement

லிச்சி பழம் சாகுபடி மற்றும் லிச்சி பழம் நன்மைகள்..! (Litchi Cultivation / Litchi Fruit Benefits)..!

Litchi farming:- லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். லிச்சிப்பழம் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த லிச்சி பழம் (litchi fruit) கோடைகாலத்தில் அதிகளவு கிடைக்கக்கூடியது. மேலும் இந்த லிச்சி பழம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் பயன்படுகிறது. மேலும் லிச்சி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த லிச்சி பழத்தை விவசாயிகள் விவசாயம் செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் பெறலாம்.

சரி இப்பதிவில் லிச்சி பழம் சாகுபடி (litchi cultivation in tamilnadu) செய்வது எப்படி? மற்றும் லிச்சி பழம் நன்மைகள் பற்றி படித்தறிவோம் வாங்க.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

லிச்சி பழம் சாகுபடி..! Litchi Cultivation..!

Litchi Cultivation – இரகங்கள்:

லிச்சி பழம் சாகுபடி பொறுத்தவரை கொல்கத்தா, சீனா, க்ரீன், பம்பாய் போன்ற லிச்சி கன்று ரகங்கள் தமிழ்நாட்டின் தட்பவெப்பத்தை தாங்கி வளரக்கூடியவை.

Litchi Cultivation – பருவம்:

லிச்சி பழம் சாகுபடி பொறுத்தவரை அக்டோபர்- நவம்பர் மாதங்கள் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

Litchi Cultivation – மண்:

லிச்சி பழம் சாகுபடி பொறுத்தவரை நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

Litchi Cultivation – நிலம் தயாரித்தல்:

லிச்சி பழம் சாகுபடி பொறுத்தவரை நடவு செய்யும் முன் தோட்ட நிலங்களை நன்றாக கிளறி உழவு செய்ய வேண்டும். பின் 7 மீட்டர் இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும். குழிகளில் இயற்கை உரங்களை நிரப்பி ஆற போட வேண்டும்.

Litchi Cultivation – விதையளவு:

லிச்சி பழம் சாகுபடி பொறுத்தவரை ஒட்டுச்செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நடவு முறையை பொறுத்து ஒரு ஏக்கருக்கு 200 முதல் 300 மரங்களை நடவு செய்யலாம்.

Litchi Cultivation – விதைத்தல்:

லிச்சி பழம் சாகுபடி பொறுத்தவரை 7 மீட்டர் இடைவெளியில் தயார் செய்துள்ள குழிகளின் மையப்பகுதியில் தரமான கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.

Litchi Cultivation – நீர் நிர்வாகம்:

லிச்சி பழம் சாகுபடி பொறுத்தவரை செடிகள் நட்டவுடன் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும், பின்பு மூன்றாம் நாள் ஒரு தண்ணீரும் விட வேண்டும். அதன் பின் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சுவது அவசியம். லிச்சி மரக்கன்றுகள் வளர்ந்தவுடன் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

Litchi Cultivation -உரம் மேலாண்மை:

லிச்சி பழம் சாகுபடி பொறுத்தவரை கன்றுகள் வளரத் தொடங்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு மாத இடைவெளியிலும் ஒரு கிலோ தழைச்சத்து, அரை கிலோ மணிச்சத்து மற்றும் ஒரு கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். கன்றுகள் செழுமையாக வளர்ச்சி பெற்ற நிலையில் 5 கிலோ தொழு உரம் உரம், 150 கிராம் தழைச்சத்து, 150 கிராம் மணிச்சத்து மற்றும் 150 கிராம் சாம்பல் சத்தை மண்ணுடன் கலந்து இட வேண்டும்.

பழங்கள் காய்க்கத் தொடங்கும் நேரத்தில் 100 கிலோ தொழுஉரம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 2 கிலோ தழைச்சத்து, 2 கிலோ மணிச்சத்து, 800 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை தொடர்ந்து அளிக்க வேண்டும்.

கோடை உழவு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க ..!

பாதுகாப்பு முறைகள் / Litchi Cultivation..!

Litchi farming – களை நிர்வாகம்:

செடிகள் நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை தேவையற்ற கிளைகளை நீக்கி விட வேண்டும். இதனால் செடிகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

பயிர் பாதுகாப்பு / Litchi Cultivation..!

Litchi farming – சாம்பல் நோய்:

சாம்பல் நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

Litchi farming – வண்டுகள்:

வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீரில் இரண்டு மில்லி என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

Litchi farming – அறுவடை:

லிச்சி மரங்கள் வளர்ந்த 7 முதல் 9 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும். பழுத்த பழங்களை சேதாரம் இல்லாமல் அறுவடை செய்ய வேண்டும்.

Litchi farming – மகசூல்:

சாதாரண இரகங்களில் ஒரு அறுவடைக்கு 80 கிலோ முதல் 90 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நல்ல இரக கன்றுகளாக இருந்தால் 100 முதல் 110 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

Litchi farming – ஊடுபயிர்:

லிச்சிமரங்களுக்கு இடையே ஊடுபயிராக முட்டைக்கோஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு, வெண்டை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்

Litchi Fruit Benefits..!

Litchi Fruit Benefits

Litchi Fruit Benefits – லிச்சி பழம் நன்மைகள்

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சி முதலிடத்தில் உள்ளது.

Litchi Fruit Benefits – லிச்சி பழம் நன்மைகள்

லிச்சி பழத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு லிச்சி பழம் உண்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.

Litchi Fruit Benefits – லிச்சி பழம் நன்மைகள்

இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.

Litchi Fruit Benefits – லிச்சி பழம் நன்மைகள்

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil
Advertisement