விவசாய டிராக்டர்க்கான கடனுதவி திட்டம்..! Tractor Loan Scheme..!

Advertisement

SBI வங்கியின் டிராக்டர்க்கான கடன் உதவி வழங்கும் திட்டம்..! New Tractor Loan Scheme In sbi..!

Tractor Loan Scheme: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று பொதுநலம்.காம் பதிவில் விவசாய டிராக்டர்க்கான வங்கி கடனுதவி எப்படி பெறலாம் என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். விவசாயம் செய்து வருபவர்களுக்கு SBI வங்கி மூலம் டிராக்டர்க்கான கடன் உதவி திட்டத்தை வழங்கி வருகிறது. விவசாயிகள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. சரி வாங்க நண்பர்களே இப்போது SBI வங்கி வழங்கும் டிராக்டர்க்கான கடன் உதவும் திட்டத்தை விரிவாக படித்து தெரிந்துகொள்ளுவோம்.

newகால்நடை காப்பீடு திட்டம்..! Livestock Insurance Scheme..!

SBI வங்கியில் டிராக்டர் வாங்குவதற்கு முக்கிய அம்சம்:

விவசாயிகளுக்கான டிராக்டர், டிராக்டர்க்கான உதிரி பாகங்கள், கருவிகள், கடன் காப்பீடு, பதிவு செலவுகளுக்கான மொத்த கடன் தொகையும் SBI வங்கி உள்ளடக்கியதாக இருக்கும். கடன் தொகையில் எந்த வித உச்ச வரம்பும் இல்லை. SBI வங்கியில் டிராக்டர் வாங்குவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்த 7 நாட்களிலே கடனுதவி வழங்கப்படும்.

கடன் செலுத்தும் வசதி:

SBI வங்கியில் விவசாயத்திற்கான வாங்கிய டிராக்டர் கடனை மாத முறையில், 6 மாத முறையில், வருடம் முறையிலும் செலுத்த வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடன் தொகையை தவறாமல் கட்டுவதன் மூலம் வாங்கிய தொகையின் வட்டியிலிருந்து 1% சலுகை அளிக்கப்படுகிறது.

இணை பாதுகாப்பு:

வங்கியில் வாங்கும் கடனிற்கு தங்களிடம் 100% மதிப்பினை கொண்ட பதிவு செய்த நிலம், அடமான பத்திரம் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு 6 அல்லது 7 லட்சத்திற்கு மதிப்புள்ள டிராக்டர் வாங்க நினைப்பவர்கள் அதற்கான நிலம், அடமான பத்திரம் வைத்திருக்க வேண்டும்.

டிராக்டர், அதனுடைய உதிரி பாகங்கள், கருவிகள், கடன் காப்பீடு, மற்றும் பதிவு செலவுகள் 15% தள்ளுபடி செய்து மீதம் தொகையினை கடனுதவியாக வழங்கப்படும்.

வட்டி விகிதம்:

வங்கியில் கொடுக்கும் தொகைக்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 11.95% அளிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் 1.05.2016 அன்றிலுருந்து சதவீதமாக கணக்கிடப்பட்டது. கடன் தொகையினை வாங்கிய முதல் மாதத்திலிருந்து சேர்த்து 60 மாதம் வரை கடனை செலுத்தலாம்.

SBI வங்கியின் கட்டண விவரம்:

கடன் வாங்குவதற்கு நாம் முன் கட்டணம், பதிவு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. அடுத்து வங்கி செயலாக்க கட்டணம் மட்டும்(Processing Fees) 0.5% செலுத்த வேண்டும்.

newமூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம் | Agriculture subsidy schemes

சான்றிதழ்கள்:

இந்த கடன் திட்டத்திற்கு நிலுவை இல்லா சான்றிதழ் நகல்(Duplicate No Due Certificate) தேவையில்லை என்று வங்கியின் மூலம் அறிவித்துள்ளார்கள்.

நடைமுறையில் பயன்படுத்தி கொண்டு இருக்கும் முத்திரை வரி(stamp Duty) என்ற சான்றிதழ் இந்த கடன் தொகை வாங்க பொருந்தும் என்கிறார்கள்.

கால தாமத தவணை:

வங்கியில் டிராக்டர்க்கான வாங்கிய கடன் தொகைக்கு கால தாமதமாக செலுத்திய வட்டி மற்றும் செலுத்தாத தொகைக்கு வருடத்திற்கு 1% வட்டி கடனாளர்கள் கட்ட வேண்டும் என்பது வங்கி அறிவிப்பு.

பதிவு செய்தல்:

டிராக்டர் வாங்கிய ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய தவறினால் 2% அபராதம் பிடிக்கப்படும்.

அடுத்ததாக Standing Instruction தவறினால் ஒவ்வொரு Standing Instruction-ற்கும் ரூ. 253/- கட்டணம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக தவணை (EMI) கட்ட தவறினால் ஒவ்வொரு தவணைக்கும் ரூ. 562/- அபராதமாக கட்டணம் செலுத்த வேண்டும்.

செலுத்தவேண்டிய ஆவணம்:

முதலில் விண்ணப்ப படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் போட்டோ இணைக்க வேண்டும்.

அடையாள சான்றிற்காக வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு இவற்றில் ஏதேனும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி சான்றுகள்: வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் இணைத்தல் வேண்டும்.

அடுத்து நில பத்திரம், டிராக்டர் வாங்க போகும் நிறுவனத்தின் Quotation இருக்க வேண்டும். அடுத்ததாக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம் வழக்கறிஞரிடம் இருந்து பெறப்பட்ட சான்று அறிக்கை(Title search report from the panel advocate) இணைக்கப்பட வேண்டும்.

இதற்கு முன் வேறு வங்கிகளில் கடன் தொகைகள் வாங்கி முறையாக செலுத்திய கடன் ஆவணங்களை இணைக்க வேண்டும். அடுத்து நில அடமான பத்திரம், பின் தேதியிட்ட காசோலைகள் இணைக்க வேண்டும்.

டிராக்டர் வாங்கிய பின் வங்கியில் சமர்பிக்கவேண்டியவை:

SBI வங்கியின் பெயரில் எழுதிக்கொடுத்த RC புக் பதிவு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்து டிராக்டர் வாங்கியதற்கான ஒரிஜினல் ரசீது இருக்க வேண்டும். அதன் பிறகு டிராக்டரின் விரிவான நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

newசொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மானியம்..! Sottu Neer Pasanam Subsidy..!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement