விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பட்டுப்புழு வளர்ப்பு..! Sericulture cultivation in tamil

Sericulture cultivation in tamil

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பட்டுப்புழு வளர்ப்பு..! Sericulture cultivation in tamil..!

பட்டுப்புழு வளர்ப்பு – Sericulture cultivation in tamil:- தண்ணீர் பற்றாக்குறை, விவசாயிகள் கூலியாட்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளினால் தென்னை, வாழை, காய்கறிகள் போன்ற பயிர் சாகுபடியைக் கைவிட்டு, பட்டுப்பழு வளர்ப்பு, அதற்கான மல்பெரி சாகுபடி முறையில் இப்பொழுது சில விவசாயிகள் ஈடுபடுகின்றன. இந்த பட்டுப்பழு வளர்ப்பு பொறுத்தவரை கொஞ்சம் பழகிவிட்டால், பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

சரி இந்த பதிவில் பட்டுப்புழு வளர்ப்பு (Sericulture cultivation in tamil) முறை பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க.

கோடை உழவு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க ..!

பட்டுப்புழு வளர்ப்பு முறை:-

பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் முழுவதும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலை வெற்றிகரமான புழுவளர்ப்புக்கு வழிவகுக்கும். நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் 5-10 முறை அறுவடை செய்யலாம். இதன் இடைவெளி 70-80 நாட்கள் ஆகும்.

மல்பெரி சாகுபடி..!

பட்டுப்புழு வளர்ப்பு – இரகங்கள்:

வி-1 மற்றும் எஸ்-36 ஆகிய இரு ரகங்களும் அதிக மகசூலைக் கொடுக்கக்கூடிய பட்டு வளர்ப்பிற்கு ஏற்ற இரகங்கள் ஆகும். பட்டுப்புழுக்கள் நன்கு வளர, இந்த இரு ரகங்களும் நல்ல சத்தான இலைகளை கொடுக்கின்றன. இவ்விரு ரகங்களைப்பற்றி விவரமாகப் பார்ப்போம்.

மல்பெரி சாகுபடி முறை:

பட்டுப்புழு வளர்ப்பு:- இணை வரிசை நடவு முறையைப் பின்பற்றினால், தற்பொழுது உள்ள முறையைவிட நல்ல பலன் கிடைக்கும். இம்முறையில் தற்பொழுது உள்ள 90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ என்ற இடைவெளியை காட்டிலும், (90 + 150) செ.மீ X 60 செ.மீ இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது.

இம்முறையில் இடைவெளி அதிகமாக இருப்பதால், விசைக்கருவி கொண்டு இடைஉழவு செய்வதற்கும், அறுவடை செய்த இலைகளை எடுத்துச் செல்வதற்கும், சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்கும் ஏற்றதாக இருக்கும்.

ஒரு ஏக்கரில் அதிகமான செடிகளை நடவு செய்யலாம்.

சுலபமாகவும், வேகமாகவும் இலைகளை எடுத்துச் செல்ல முடிவதால், ஈரப்பதம் குறைவதைத் தடுக்கமுடியும்

தண்டு அறுவடை செய்யப்படுவதால் 40% வேலையாட்கள் குறையும்.

பட்டுப்புழு வளர்ப்பு – இரசாயன உரம் மற்றும் தொழு உரமிடுதல்

20 டன் தொழுஉரத்தை, சமமாக இரண்டாகப் பிரித்து இருமுறை இடவேண்டும்.

ஒரு வருடத்திற்கு, ஏக்கருக்கு வி1 ரகத்திற்கு 350:140:140 கிலோ என்ற அளவிலும் எஸ்36 இரகத்திற்கு 300:130:120 கிலோ என்ற அளவிலும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை சமமாகப் பிரித்து 5 முறை இடவேண்டும்.

பட்டுப்புழு வளர்ப்பு – நீர் மேலாண்மை:

80-120 மி.மீ அளவிற்கு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

நீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பின்பற்றி 40% நீரைச் சேமிக்க முடியும்.

அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!

பட்டுப்புழு வளர்ப்பு / Sericulture cultivation in tamil..!

பட்டுப்புழு கலப்பினங்கள் / Sericulture cultivation in tamil:

Sericulture cultivation in tamil:- இரு சந்ததி கலப்பினங்களாகிய CSR2 X CSR4 மற்றும் இருவழிக்கரு ஒட்டாகிய கிருஷ்ணராஜாவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

இளம்புழு வளர்ப்பு:

Sericulture cultivation in tamil:- முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. இரண்டாம் பருவம் வரை அவை இளம் புழுக்கள் பருவத்தைச் சேரும்.

புழு வளர்ப்பில் (pattu poochi valarpu) ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள், நோய்களை உண்டாக்கும் என்பதால், அவற்றை சிறந்த முறையில் கவனிக்க வேண்டும்.

நல்ல தரமான புழுவளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதால், தனி புழுவளர்ப்பு மனை அவசியமாகும். இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

வளர்ந்த புழு வளர்ப்பு:

Sericulture cultivation in tamil:- வளர்ந்த புழு வளர்ப்பு (pattu poochi valarpu) மூன்றாம் பருவத்திலிருந்து தொடங்குகிறது. பட்டுப்புழுக்கள் மிகவேகமாகவும், அதிகமாகவும் இலைகளை உண்ணும். பட்டு வளர்ப்பிற்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிகள் கீழ்க்கண்டவாறு உள்ளன.

வளர்ப்பு மனை:

Sericulture cultivation in tamil:- மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பினை தனியே பேணி வளர்க்கும் போது அதற்கு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் மிகவும் அவசியம். 24-280சி வெப்பமும் 70-80% ஈரப்பதமும் தேவை. நல்ல குளிர்ச்சியான காற்றோட்டமான வளர்ப்பு மனை மிகவும் அவசியம். வளர்ப்பு (pattu poochi valarpu) மனையின் கூறை அமைக்கும் போதும், கட்டிடத்தை வடிவமைக்கும் போதும், குளிர்ச்சியுடன் அமைப்பதற்கு ஏற்ற வழிகளை மேற்கொள்ள வேண்டும். இலைகளை சேமிப்பதற்கும், இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும், தோலுரிப்பிற்கும் வேண்டிய இடவசதிகளுடன் அமைக்க வேண்டும். சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கு ஏற்றறுறவாறு வளர்ப்பு மனையைக் கட்ட வேண்டும்.

பட்டுபுழு வளர்ப்பின் (pattu poochi valarpu) வகை மற்றும் அளவைப் பொறுத்து வளர்ப்பு மனையின் அளவு வேறுபடும். 400 சதுர அடி தரையளவைக் கொண்ட வளர்ப்பு மனையில் 100 நோயற்ற முட்டைத் தொகுதிகளை (டி.எப்.எல்.) வளர்க்க முடியும் (1 டி.எப்.எல். = 500 புழுக்கள்).

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

வளர்ப்புச் சாதனங்கள்:

பட்டுப்புழு வளர்ப்பு – Sericulture cultivation in tamil:- அதிகமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தையும், காற்றோட்டத்தையும் வளர்ந்த புழுக்களால் தாங்கிக்கொள்ளமுடியாது. வளர்ப்பு மனையின் வெப்பத்தைக் குறைக்கவும், புழுக்களின் கழிவிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று மற்றும் சூடான காற்றை வெளியேற்றவும், நல்ல காற்றோட்ட கட்டமைப்புகள் அவசியம்.

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Pasumai Vivasayam in Tamil