செங்குத்து விவசாயம் பற்றி தெரியுமா ?

செங்குத்து விவசாயம்

செங்குத்து விவசாய முறை

வணக்கம் நண்பர்களே, பொதுநலம்.காமின் இனிமையான நேயர்களே. இன்று நம் விவசாயம் பதிவில் எல்லோருக்கும் பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். விவசாயம் என்பது நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு விஷயம் என்றே கூறலாம். விவசாயம் என்பது நம் எல்லோருடைய வாழ்வில் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல் அதிகமான விவசாய முறைகள் உள்ளன. இன்று செங்குத்து விவசாயம் என்றால் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் மூலம் பார்க்கப்போகிறோம். வாங்க நண்பர்களே செங்குத்து விவசாயத்தை பற்றி பார்ப்போம்.

விவசாயம் என்றால் என்ன:

vivasaayam

விவசாயம் என்பது மனிதன் இயற்கையிலிருந்து பெறக்கூடிய பொருள்களை சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமில்லாமல், இயற்கையோடு ஒன்றிணைந்து உணவு பொருட்களை உற்பத்தி செய்வதாகும். விவசாயம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சில வகையான பயிர்களை உற்பத்தி செய்வது மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றை விவசாயம்” என்று கூறுகின்றனர்.

மாடி தோட்டம் தர்பூசணி சாகுபடி

எதிர்காலத்தில் விவசாயம்:

senguththu vivasaayamurai

அன்றைய காலக்கட்டத்தில் விவசாயம் என்பது நிலத்தில் இறங்கி பல வேலை ஆட்களை வைத்து விவசாயம் செய்வதாகும். ஆனால் இன்று பலபேர் தன்னுடைய வீட்டு மாடியில் மாடித்தோட்டம் அமைத்து விவசாயம் செய்கின்றனர். அப்படி நாம் விவசாயம் செய்ய முன்வந்தாலும் அதற்கு தேவையான வளமான மண், வேலை ஆட்கள் இதுபோல இல்லாததால் இது போன்ற விவசாயத்தை கடைபிடிக்க முடியவில்லை. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டது தான் “செங்குத்து விவசாயம்”. எதிர்காலத்தில் இந்த விவசாயம் தான் பயன்படும் என்று கூறுகின்றனர்.

உலகளவில் சமீபகாலமாக அதிகளவில் பேசப்பட்டு வருகின்ற ஒரு மாற்று விவசாய முறை தான் இந்த செங்குத்து விவசாயம் (Vertical Farming). மண்ணும், சூரியஒளியும் தேவையில்லா விவசாயம் அதுவே செங்குத்து விவசாயமுறை ஆகும். செங்குத்து விவசாயத்திற்கு குறைந்தளவு தண்ணீர் மட்டுமே போதுமானது. மண்ணும் சூரியஒளியும் இல்லாத விவசாயமா என்று தானே ஆச்சர்யபடுகிறீர்கள். இதுவே செங்குத்து விவசாயத்தின் சிறப்பம்சம் ஆகும். 

இயற்கை விவசாயம் செய்வது எப்படி

செங்குத்து விவசாயம் பயன்படுத்தும் முறை:

ஒரு பெரிய அறையில், ஒற்றின் மேல் ஒன்றாக, அடுக்கு அடுக்காக இருக்கும் அலமாரியில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தட்டிலும் செடிகள் நடப்பட்டிருக்கும். அதேபோல் ஒவ்வொரு தட்டிற்கு மேல் எல்.ஈ.டி பல்புகள் எரிந்து கொண்டிருக்கும். இது தான் செங்குத்து விவசாயத்தின் அடிப்படை முறையாகும். மிக குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே இதற்கு போதுமானது.

இந்த விவசாயத்தில் மண்ணிற்கு பதிலாக மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகையான துணியில் இந்த செடிகள்  நடப்படுகின்றன. சூரிய ஒளிக்கு பதிலாக எல்.ஈ.டி பல்புகள் பயன்படுத்தபடுகின்றன.

இந்த செங்குத்து விவசாயத்தில் முக்கியமான 2 முறைகள் உள்ளன.

  1. ஏரோபோனிக் (Aeroponics).
  2. ஹைட்ரோபோனிக் (Hydroponics).

வளி வளர்ப்பு: 

Aeroponics

தாவரங்களை சாதரணமாக மண்ணில் வளர்க்காமல், மாற்று முறையில் காற்று அல்லது மூடுபனியினால் வளர்க்கப்படும் முறைக்கு வளி வளர்ப்பு (Aeroponics) என்று பெயர். இந்த முறை நீரியல் மற்றும் உயிரணு வளர்ப்பிலிருந்து மாறுபட்டது. இதுபோன்ற வளர்ப்புகளில் ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வளி வளர்ப்பில் வளர்பூடகம் என்று ஏதும் பயன்படுத்துவதில்லை. வளி வளர்ப்பு முறையில் மட்டுமே காற்று மற்றும் பனிச்சூழலில் தாவரங்களை வளர்க்கும் செயல்முறை நடைபெறுகிறது.

எந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம்

நீரியல் வளர்ப்பு: hydroponics

மண் இல்லாமல் கனிம ஊட்டக்கூறுகளைக் கொண்ட நீர்ம வளர்ப்பூடகக் கரைசல்களை பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் முறையை நீரியல் வளர்ப்பு (Hydroponics) முறை என்று கூறுகின்றனர். இதை “நீரியல் வளர்ப்பு அல்லது மண்ணில்லா வேளாண்மை” என்று கூறலாம். இது வேளாண்மையின் ஒரு துணைக்குழு ஆகும்.

கனிம ஊட்டச்சத்துள்ள ஊடகத்தில் நிலத்தடி செடிகளின் வேர்கள் மட்டுமே வளர்க்கப்படுகிறது. மண்ணிற்கு பதிலாக உருள்மணிகள் அல்லது கூழாங்கற்கள் போன்ற செயலற்ற ஊடகத்தை பயன்படுத்தி வேர்களுக்கு பிடிப்பு தன்மை செய்யப்படுகிறது. இதில் தாவரங்கள் தமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீரில் கரைந்துள்ள சில கரிம மூலங்களை உறிஞ்சி பெற்றுக்கொள்கின்றன.

செங்குத்து விவசாயத்தின் நன்மைகள்:

  • பயிர்கள் மற்றும் தாவரங்களை வருடம் முழுவதும் இதில் விளைவிக்கலாம்.
  • ஊட்டச்சத்து மற்றும் தண்ணீர் இதில் வீணாகுவதில்லை.
  • சிறிய இடவசதியே இதற்கு போதுமானதாக உள்ளது.
  • பண்ணை இயந்திரங்கள் மற்றும் பயிர்களின் போக்குவரத்து பயன்பாட்டை கணிசமாக குறைகிறது.
  • இதில் வானிலை தொடர்பான பயிர் செயலிழப்புகள் ஏதும் இல்லை.
  • இந்த விவசாயத்தின் மூலம் நகர மக்களின் தேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்துகொள்ளலாம்.
  • மேலும், இதில் இயற்கை சீற்றங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைவது போன்ற பாதிப்புகள் இருக்காது.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம்