Vetchi Flower Growth Tips
வீட்டை சுற்றி அழகழகான பூச்செடிகள் வளர்க்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். அதனால் பல வண்ணங்களில் பலவகையான பூச்செடிகளை வாங்கி வளர்க்கிறார்கள். சில பேர் வீட்டில் வளர்க்கும் பூ செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் பூக்கும். ஆனால் ஒரு சிலர் வீட்டில் வளர்க்கும் பூச்செடிகள் நன்றாக வளர்ந்திருந்தாலும் பூக்கள் பூக்காமலே இருக்கும். அப்படி வளராமல் இருக்கும் பூச்செடிகளில் இந்த வெட்சி பூவும் ஒன்று. இந்த வெட்சி பூ சிலர் வீட்டில் நன்றாக வளரும் சில வீடுகளில் நன்றாக வளராது. அப்படி வெட்சி பூ செடியில் பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அதில் பூக்கள் அதிகமாக பூக்க இதை மட்டும் செய்யுங்க..! |
வெட்சி பூ செடி நன்றாக வளர:
இந்த பூ பார்ப்பதற்கு அழகாகவும் பல வண்ணக்களிலும் இருக்கும். இந்த பூக்கள் கொத்து கொத்தாக பூக்க கூடியது. இதை நாம் செடியாக வாங்கி வளர்க்கலாம்.
இந்த இட்லி பூ செடி வளர்ப்பதற்கு மண் கட்டி இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு தொட்டியை எடுத்து கொள்ளுங்கள். அதில் செம்மண்ணை கட்டியாக இல்லாமல் உதிரியாக எடுத்து கொள்ளுங்கள்.
பின் அதில் நீங்கள் வாங்கி வந்த செடியை நட வேண்டும். இந்த செடியை நடுவதற்கு முன் அந்த குழியில் சிறிதளவு மாட்டு சாணத்தை வைக்க வேண்டும். பின் அதன் மேல் இந்த செடியை நட வேண்டும். இதுபோல செய்தால் செடி பிடித்து நன்றாக வளர ஆரம்பிக்கும்.இந்த செடிக்கு ஈரப்பதம் அதிகமாக இருக்க கூடாது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் செடியின் வேர்கள் அழுகி செடி வளராமல் போய்விடும். அதனால் செடிக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இந்த செடிக்கு அதிகமாக வெயிலும் தேவைபடாது. அதனால் நீங்கள் இந்த வெட்சி பூ செடியை அதிக வெயில்படும் இடத்தில் வைக்க தேவையில்லை.
இந்த செடி நன்றாக வளர்ந்து பூக்கள் பூப்பதற்கு வெங்காயத்தோல் மற்றும் வாழைப்பழத்தோல் ஊறவைத்த தண்ணீரே போதுமானது. வெங்காயத் தோலையும், வாழைபழத் தோலையும் இரவு தூங்குவதற்கு முன் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.அந்த நீரை வாரத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு ஊற்றவேண்டும். இதுபோல செய்தால் செடியில் பூக்கள் அதிகமாக பூக்க ஆரம்பிக்கும்.
மயில் மாணிக்கம் செடி வீட்டில் வளர்க்கும் முறை…! |
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |