ஒரே வாரத்தில் தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடி முளைக்க இதை ட்ரை பண்ணுங்க..!

valukkai thalaiyil mudi valara in tamil

வழுக்கை தலையில் முடி வளர

ஹாய் நண்பர்களே..! முடியை பராமரிப்பது என்பது அனைவருக்கும் பிடிக்கும். இதற்காக சிலர் பார்லருக்கு சென்று செலவு செய்து பராமரிப்பவர்களும் இருக்கின்றனர். முடி உதிர்வு, முடி கொட்டுதல், நரை முடி பிரச்சனை, தலை முடி வெடிப்பு இப்படி நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இதை எல்லாம் கூட சரி செய்தாலும் தலையில் ஒரு சில இடத்தில் மட்டும் முடி உதிர்ந்து வழுக்கையாக இருப்பது போல காணப்படும். தலையில் முடி உதிர்ந்து வழுக்கையாக இருக்கும் இடத்தில் ஒரே வாரத்தில் மீண்டும் முடி வளருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இன்றைய அழகு குறிப்பு பகுதியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்⇒ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும்                                     அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது

வழுக்கை தலையில் முடி வளர்ப்பது எப்படி:

உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பேஸ்ட் தயாரித்து 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர்ப்பது எப்படி என்று கீழே பார்த்து தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம்- 5
  • கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன் 
  • தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன் 

செய்முறை விளக்கம்:

ஸ்டேப்- 1

முதலில் 5 சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொண்டு நன்றாக அலசிய பிறகு அதை ஒரு இடி உரல் அல்லது மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக கற்றாழையை எடுத்துக்கொண்டு சுத்தமாக அலசி அதில் உள்ள ஜெல்லை  2 ஸ்பூன் எடுத்து வெங்காயம் மசிந்து இருப்பதுடன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

அரைத்து வைத்துள்ள பேஸ்டை ஒரு தனி பாத்திரத்தில் எடுத்து வைத்து விடுங்கள். அதன் பிறகு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்தால் பேஸ்ட் தயார் ஆகிவிடும். (குறிப்பு: கடுகு எண்ணெய் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் அதனால் நீங்கள் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது நல்லது) தயார் செய்த அந்த ஜெல்லை தலையில் எப்படி அப்லை செய்வது என்று தொடர்ந்து இந்த பதிவை படித்து பாருங்கள்.

முடி இல்லாத இடத்தில் முடி வளர:

குளிக்க போவதற்கு 1/2 மணிநேரதிற்கு முன்பு நீங்கள் தயார் செய்த பேஸ்டை உங்களுடைய தலையில் மசாஜ் செய்வது போல 10 நிமிடம் தேய்த்து விடுங்கள்.

சின்ன வெங்காயம் மற்றும் கற்றாழை ஜெல் இவை எல்லாம் தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும். அதனால் நீங்கள் 10 நிமிடம் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் எப்போதும் தலை குளிப்பது போல் குளித்து விடுங்கள். விரைவில் உங்களுடைய தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடி வளர்ந்து விடும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil