திருமணம் நடப்பது போல் கனவு கண்டால்
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் கனவு என்பது இயல்பானது. ஆனால் இந்த கனவுகள் ஒரு சில கனவுகள் நடக்கும், ஒரு சில கனவுகள் நடக்காது. அது போல் நாம் கனவுகளுக்கு வயதானவர்களிடம் பலன்களை கேட்டு தெரிந்து கொள்வோம் அல்லவா.! ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் இருக்கிறது. இந்த பதிவில் நண்பர்களுக்கு திருமணம் நடப்பது போல்கனவு கண்டால் என்ன பலன், திருமணம் சம்மந்தமாக கனவு கண்டால் என்ன பலன் என்றது தெரிந்து கொள்வோம் வாங்க..
நண்பர்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால்:
மயில் கனவில் வந்தால் என்ன பலன்..! |
இரண்டாவது திருமணம் செய்வது போல் கனவு கண்டால்:
கனவு காண்பவர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இன்னொரு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால், உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதிர்ஷ்டம் தரும் கனவுகள் எது தெரியுமா
தாலி கட்டுவது போல் கனவு கண்டால்:
கனவு காண்பவர் கனவில் தாலி கட்டுவது போல் கனவு கண்டால், அவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க போகிறது என்பதை குறிக்கிறது.
கணவனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால்:
கனவு காணும் பெண்கள் தங்களுடைய கணவனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால், நீங்கள் எந்த செயல்கள் செய்தாலும் அதை கவனத்தோடு செய்ய வேண்டும். மேலும் அதிக செலவுகள் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது. மேலும் அதற்கான தொகையை சேமித்து வைக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |