Pomegranate Peel Powder Business in Tamil
சுயதொழில் தொடங்க நினைப்பவர்கள் மற்றும் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் என்னதான் வேலைக்கு சென்றாலும் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறோம். நமக்கு ஏற்படும் அன்றாட செலவுகளை பூர்த்தி செய்து எதிர்கால பயன்பாட்டிற்கு சேமித்து வைக்க வேண்டுமானால் நாம் சுயதொழில் தொடங்குவதே சிறந்தது. அந்த வகையில் இப்பதிவில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறக்கூடிய சுயதொழில் ஒன்றினை பற்றிய விவரங்களை பதிவிட்டுள்ளோம்.
அதாவது மாதுளை பழத்தின் தோலை பவுடர் செய்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய தகவலை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Start Pomegranate Peel Powder Business in Tamil:
தேவையான மூலப்பொருட்கள்:
- மாதுளம் பழத்தோல்
- பேக்கிங் மெஷின்
- பேக்கிங் கவர்
தேவையான முதலீடு:
முக்கிய மூலப்பொருளான மாதுளம் பழத்தோல் பழச்சாறு கடைகளில் தூக்கிப்போடக் கூடிய பொருள். எனவே இதனை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் பேக்கிங் மெஷின் 1000 ரூபாய் முதல் கிடைக்கிறது.
எனவே பேக்கிங் மெஷின் 1000 ரூபாய் மற்றும் பேக்கிங் கவர் 1000 ரூபாய் என கணக்கில் கொண்டால் 2000 ரூபாய் இருந்தால் போதும் இத்தொழிலை தொடங்கலாம்.
இப்போது Trending-ஆ உள்ள இந்த தொழிலை செய்தால் ஒரு நாளைக்கு மட்டுமே 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! |
தேவையான சான்றிதழ்:
இத்தொழில் ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் FSSAI சான்றிதழ் பெற வேண்டும்.
மேலும், நீங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்தால் GST Registration சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேவையான இடம்:
இத்தொழிலை தொடங்க தனியாக எந்த இடமும் தேவையில்லை. உங்கள் வீட்டில் ஒரு சிறிய அரையும் காயவைக்க சுத்தமான இடமும் இருந்தால் போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் மாதுளம் பழத்தோலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் அலசி கொள்ளுங்கள். பிறகு, இதனை ஒரு வாரம் வரை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது காயவைத்த மாதுளம் பழத்தோலினை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர், இதனை ஆற வைத்து சலித்து எடுத்தால் மாதுளம் பழத்தோல் பவுடர் தயார்.
500 ரூபாய் முதலீட்டில் மாதம் 1 லட்சம் வரை வருமானம் தரக்கூடிய அருமையான சிறுதொழில்..! |
பேக்கிங் செய்யும் முறை:
இப்போது, தயார் செய்து வைத்துள்ள மாதுளம் பழத்தோல் பவுடரை கடைகளில் விற்கும் பேக்கிங் கவரில் அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயர் கொண்ட கவரில் உங்களுக்கு தேவையான அளவுகளில் பேக் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் இடங்கள்:
- சூப்பர் மார்க்கெட்
- நாட்டு மருந்து கடை
- மருந்து தயாரிக்கும் கடை
- மருந்தகம்
இத்தொழிலில் கிடைக்கக்கூடிய வருமானம்:
100 கிராம் மாதுளம் பழத்தோல் பவுடர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 1 கிலோ மாதுளம் பழத்தோல் பவுடரின் விலை 800 ரூபாய் ஆகும். எனவே நீங்கள் நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் 1 மாதத்திற்கு 100 கிலோ விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக 80,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |