Advertisement
உக்ரைன் வரலாறு | Ukraine History in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய வரலாற்று பகுதியில் உக்ரைன் நாட்டை பற்றி பார்க்கலாம். இரண்டாம் உலகப்போர் உள்நாட்டு சண்டை, அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பு என பல போர்களை பார்த்தது உக்ரைன் நாடு. அடிக்கடி யுத்தங்களை கண்ட நாடு என்றால் அது உக்ரைன் தான், அதனாலேயே இந்த நாட்டை பலரும் போர்களின் நாடு என்று அழைக்கிறாரக்ள். நாம் இந்த தொகுப்பில் உக்ரைன் நாட்டின் சிறப்பம்சங்களை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உக்ரைன் நாடு:
- உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. 10, 11-ம் நுாற்றாண்டில் வலிமையான கீவியன் ரஸ் பேரரசு ஆட்சி செய்தது. உக்ரைன், பெலாரஸ், போலந்து, தற்போதைய ரஷ்யாவின் பல பகுதிகளை கொண்ட பெரிய பிரதேசமாக இருந்தது.
- உக்ரைனின் பரப்பளவு 603,628 km2. இந்த நாட்டில் உள்ள மக்கள் தொகை 41.2 மில்லியன். ஐரோப்பாவில் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக 8-வது இடத்தில் உள்ளது.
உக்ரைன் போர் | Ukraine War in Tamil
கொசாக் கிளர்ச்சி:
- 13-ம் நூற்றாண்டில் நடந்த மங்கோலிய படையெடுப்பிற்கு பிறகு போலந்து, லிதுவேனியா, ஆஸ்திரியா, இம்பீரியல் ரஷ்ய போன்ற நாடுகளில் உள்ள அரசர்கள் உக்ரைனை பிரித்து கொண்டனர். இதனை உக்ரைன் மக்கள் எதிர்த்ததால் கொசாக் கிளர்ச்சி எழுந்தது, இந்த கிளர்ச்சியில் பல மக்கள் கொல்லப்பட்டனர்.
முதல் உலகப்போர்:
- உக்ரைனில் 1914-1918-ல் முதல் உலகப்போர் நடந்தது. 1918-ல் உக்ரைன் மக்கள் குடியரசு’ என தனி நாடு உருவானது. இதை ரஷ்ய அரசர்கள், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் எதிர்த்து மூன்று ஆண்டுகள் சண்டை நடந்தது. 1922-ல் கிழக்கு உக்ரைனை சோவியத் யூனியன் கட்டுப்பாட்டிலும், மேற்கு உக்ரைனை போலந்து கட்டுப்பாட்டிலும் வந்தது.
- போலந்து நாட்டில் உள்ள மக்கள் உக்ரைன் மொழியை உபயோகிக்க கூடாது என்று சட்டம் எழுந்தது, அதனை எதிர்த்தும் மக்கள் போராடினர். 1939-ல் ஹிட்லர் தலைமையிலான நாஜிப் படைகள் மற்றும் சோவியத் யூனியன் போலந்து நாட்டை எதிர்த்தது. இதில் சோவியத் யூனியன் மேற்கு உக்ரைனை கைப்பற்றியது.
இரண்டாம் உலகப்போர்:
- 1939-1945 -ல் நடந்த இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் சோவியத் யூனியன் மீது போர் தொடுத்தது. ஜெர்மனி படைகள் உக்ரைனில் உள்ள கீவ் நகரின் மீது தாக்குதல் நடத்த சோவியத் படைகள் ஜெர்மனி படைகளை எதிர்த்து போரிட்டது. இரண்டு ஆண்டுகள் இந்த போர் நடந்தது, ஆனாலும் கீவ் நகரை கைப்பற்ற முடியவில்லை.
- இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உக்ரைன் நாட்டில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடியது. இதனால் உக்ரைன் மக்கள் சைபீரியாவுக்கு சென்றனர். அதன் பிறகு உக்ரைன் நாட்டில் ரஷ்யர்கள் குடியேறினார்கள். 1991-ல் சோவியத் யூனியன் பிரிந்து உக்ரைன் தனி நாடாக உருவானது.
உக்ரைன் நாட்டின் தலைநகரம் எது? |
உக்ரைன் போர் காரணம்:
- சோவியத் யூனியனிலிருந்து 7.8 லட்சம் படை வீரர்கள், அணு ஆயுதங்கள் கிடைத்தது. இந்த ஆயுதங்களை உக்ரைன் நாடு ரஷ்யாவிடம் கொடுத்தது. ரஸ்யா உக்ரைன் நாட்டின் மீது 2014-ல் தாக்குதல் நடத்தி கிரீமியா பகுதியை கைப்பற்றியது. இந்த மோதலின் இரண்டாவது கட்டம் தான் இப்போதைய போர்.
- நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் ரஸ்யாவிற்கு அதில் விருப்பமில்லை. ரஸ்யாவின் எதிர்ப்பை மீறி உக்ரைன் சேர விரும்புவதால் ரஸ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கிறது.
- நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் ராணுவ வீரர்கள் இருப்பதால், ஏதாவது ஒரு நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது நேட்டோ ராணுவ உதவிகளை பெற முடியும். இந்த நேட்டோ அமைப்பில் 30 நாடுகள் இணைந்துள்ளன.
- 24 பிப்ரவரி 2022 அன்று அதிகாலையில் உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்த போரை தடுக்க உக்ரைன் நாட்டுப் பிரதிநிதிகள் பெலரஸ் நாட்டின் கோமெல் என்ற இடத்தில் 28 பிப்ரவரி 2022 பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய வரலாறு |
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |
Advertisement