உக்ரைன் நாட்டின் தலைநகரம் | Capital of Ukraine in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று அனைத்து சமூக வலைத்தளங்களில், செய்திகளில், பல ஊடகங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செய்தி என்னவென்றால் உக்ரைன் நாட்டின் போர் பிரச்சனை தான். இதனால் மக்களுக்கு பல பின்னடைவுகள் ஏற்பட்டு உள்ளது என்பது வருத்தத்திற்குரிய செய்தி. நாம் இன்றைய பொது அறிவு பகுதியில் உக்ரைன் நாட்டின் தலைநகரம் எது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
தமிழ்நாட்டின் தலைநகரம் எது? |
உக்ரைன் நாட்டின் தலைநகரம் எது?
விடை: உக்ரைன் நாட்டின் தலைநகரமாக விளங்குவது கீவ்.
உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம்:
உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. உக்ரைன் வடக்கே பெலருசுடனும்; மேற்கே போலந்து, சிலோவாக்கியா, அங்கேரி உடனும்; தெற்கே உருமேனியா, மல்தோவா உடனும்; கரையோரமாக அசோவ் கடல், கருங்கடல் உடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உக்ரைனின் பரப்பளவு 603,628 km2 (233,062 sq mi) ஆகும்.
உக்ரைன் நாட்டில் தற்போது போர் பிரச்சனையானது மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து இன்றோடு சரியாக ஒரு வாரம் ஆகிறது. 7 நாள் போரில் உக்ரைன் நாடு கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது.
உக்ரைன் அதிபர் பெயர்:
- வொலோதிமிர் ஸெலன்ஸ்கி
போர் பலி:
ரஷ்ய நாட்டின் தரப்பில் உக்ரைனில் இருந்த 6000 இராணுவ வீரர்கள் உயிர் இழந்துவிட்டதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவிற்கு வெளியே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு பீரங்கிகள் வரிசையாக நிற்கின்றன. இப்போது உக்ரைனில் கார்கீவ் பகுதியில் உச்சகட்ட நிலையில் போர் தீவிர நிலையை அடைந்துள்ளது.
போரின் விளைவுகள்:
- உக்ரைனில் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
- உருசியா நாட்டின் பணத்தின் மதிப்பு 8% அளவில் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
- மாஸ்கோ பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- உக்ரைன் நாட்டின் தலைநகரம் கீவ் மற்றும் கார்கீவ், சுமி போன்ற நகரங்களில் உருசியப் படைகள் தரையிறங்கி தாக்குதல்கள் தொடுத்தது.
- உருசியாவுடனான அரசியல் ரீதியான உறவுகளை உக்ரைன் துண்டித்துக் கொண்டது.
- ஐரோப்பிய, கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் தங்கள் வான்வெளியில் ருசிய விமானங்கள் பறக்கத் தடை விதித்தது.
- அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உருசியா மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் நிதி பரிமாற்றத் தடைகள் விதித்தது.
ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் |
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் எது? |
அழிவுகள்:
உக்ரைனில் நடந்த போரில் 06-ம் நாள் மிகவும் கடுமையாக இருந்தது. கார்கீவ் நகரத்தில் ருசியப் படைகள் உலகின் இரண்டாவது பெரிய தொலைக்காட்சி கோபுரம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அருகில் குண்டு மழை பொழிந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது .
கீவ் நகரத்திலும் உருசியா இராணுவம் அரசுக் கட்டிடங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.
கார்கீவ் நகரத்தில் மருத்துவப்படிப்பு படிக்கும் இந்திய மாணவர் நவீன் எஸ். கவுடா, உருசியா இராணுவத்த்தின் துப்பாக்கித் தாக்குதலால் கொல்லப்பட்டார்.
உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள்:
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக ஏ321 விமானங்களை பயன்படுத்தி இண்டிகோ விமான நிறுவனம் 2 மீட்பு விமானங்களை இயக்குகிறது.
இந்த விமானங்கள் டெல்லியில் இருந்து புக்கரெஸ்ட், ருமேனியா மற்றும் புடாபெஸ்ட், இஸ்தான்புல் வழியாக ஹங்கேரிக்கு இயக்கப்படுகின்றன.
இந்த மீட்பு நடவடிக்கை இந்திய அரசின் #OperationGanga பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள், ஏர்-சுவிதா போர்டலில் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன் இருந்த கட்டாய கோவிட் நெகட்டிவ் ஆர்டிபிசிஆர் சோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழுடன் ஆவணங்களைப் பதிவேற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |