பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் எது?

Capital of Philippines in Tamil

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் எது? | Capital of Philippines in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் இன்றைய பொது அறிவு வினா விடையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் எது? மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை பற்றி நாம் அறியாத சில தகவல்களை படித்தறியாளம். இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.. மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்கள் அப்பொழுது தான் அறிவு திறன் மேலும் மேலும் வளர்ந்துகொண்டிருக்கும். சரி வாங்க இந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் எது?

விடை: மணிலா

பிலிப்பைன்ஸ் பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்கள்:

தென்கிழக்கு ஆசியாவில் 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற முதல் நாடு பிலிப்பைன்ஸ்

கடந்த 10 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 16 புதிய பாலூட்டிகளுடன் புதிய விலங்கினங்களை கண்டுபிடிப்பதில் பிலிப்பைன்ஸ் முதலிடத்தில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஷூக்கள் 2002ம் ஆண்டு பிலிப்பைன்சின் மரிகினா நகரில் தயாரிக்கப்பட்டது. இதன் நீளம் 17. 4 அடி, அகலம் 7.9 அடி, உயரம் 6.6 அடி. இந்த ஒரு ஜோடி ஷூக்களை தயாரிக்க 20 லட்சம் பிலிப்பைன்ஸ் பெசோஸ் செலவாகி இருக்கிறது.

அமெரிக்காவை தவிர உலகில் ஸ்கங்க்ஸ் எனப்படும் விலங்கு காணப்படும் இடம் இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகும்.

ஆசியாவில் உள்ள பெரும்பான்மையான கிறிஸ்தவ நாடு பிலிப்பைன்ஸ் மட்டுமே. அதன் மக்கள் தொகையில் 80% பேர் ரோமன் கத்தோலிக்கர்கள்.

பிலிப்பைன்ஸ் தீவான லூசனில் உள்ள பினாட்டுபோ எரிமலை 15 ஜூன் 1991 ல் வெடித்தது. இது உலகின் மிகப்பெரிய காளான் மேகத்தை உருவாக்கியது. பினாட்டுபோ எரிமலை 10 பில்லியன் மெட்ரிக் டன் மாக்மா மற்றும் 20 மில்லியன் சல்பர் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் வெளியேற்றியது.

பிலிப்பைன்ஸ் சட்டத்தில் ஒருவரை கொல்வது 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் வகையில் உள்ளது.

உலகின் மிக அரிதான மற்றும் மிகவும் விலையுயர்ந்த சங்கு பிலிப்பைன்ஸில் காணப்படும் கோனஸ் குளோரியாமஸ். இது இங்கு காணப்படும் 12 ஆயிரம் வகையான சங்குகளில் ஒன்றாகும்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil