History of Silambam in Tamil
வணக்கம் நண்பர்களே. இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சிலம்பாட்டத்தின் வரலாறு பற்றித்தான் பார்க்க போகிறோம். சிலம்பாட்டம் பற்றி அனைவருமே அறிந்து இருப்பீர்கள். ஆனால் சிலம்பாட்டம் எப்படி வந்து என்று பலபேருக்கு தெரியாது. தமிழர்களின் தற்காப்பு கலைகளில் ஒன்றான நம் சிலம்பாட்டத்தை பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் நாம் சிலம்பாட்டத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டு நம் தலைமுறையினருக்கும் அதன் பெருமையை பற்றி கூற வேண்டும். இப்போது சிலம்பாட்டம் இல்லாத திருவிழாக்களே இல்லை என்று கூட சொல்லலாம். எல்லாவிதமான விழாக்கால நிகழ்ச்சிகளிலும் நீங்கா இடத்தை பெற்று வருகிறது. ஓகே வாருங்கள் நண்பர்களே சிலம்பாட்டத்தின் வரலாற்றினை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு…! |
சிலம்பாட்டத்தின் வரலாறு:
பழங்காலத்தில் உள்ள தமிழ் மக்கள் சிங்கம்,புலி போன்ற கொடிய வனவிலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள கையாண்ட தற்காப்பு முறையே சிலம்பம் என்ற கலையாக வளர்ந்துள்ளது. தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கிய காலத்தில், முதலில் பயன்படுத்தியது கம்பு மட்டும் தான். இதுவே காலப்போக்கில் சிலம்பு கலையாக மாறியுள்ளது. அக்காலத்தில் தமிழர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள் மற்றும் கம்பு போன்றவற்றை பயன்படுத்தினர். அதில் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் என்றால் கம்பு என்ற “சிலம்பம்” ஆகும்.முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது தனியார் அமைப்புகளிலும் பள்ளிகளிலும் கற்று தரப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விளையாட்டு போட்டிகளில் வீர விளையாட்டு என்ற சிறப்பினையும் பெற்றது.
வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடிமுறை, கர்நாடக சுவடு, சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை மற்றும் நெடுங்கம்பு போன்ற பெயர்களில் இன்றும் தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சிலம்பம் ஆடப்பட்டு வருகிறது.
சிலம்பாட்டம் பெயர் காரணம்:
சிலம்பம் என்ற சொல் “சிலம்பு” என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பது “ஒலித்தல்” என்று பொருள் தரும். சிலம்பம் ஆடும்போது உருவாகும் சத்தத்தினை குறிக்கும் வகையில் சிலம்பம் என்று பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது.சிலம்பத்தின் பழமை:
சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமை உடையது என்று கூறப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் சிலம்பும் ஒன்று என்று கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சிலப்பதிகாரத்தில், சிலம்பு ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அதனை வெளிநாட்டவர் விரும்பி வாங்கி செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு |
சிலம்பத்தின் வகைகள்:
- துடுக்காட்டம்
- குறவஞ்சி
- போர்சிலம்பம்
- அலங்கார சிலம்பம்
- நாகதாளி
- நாகசீறல்
- பனையேறி மல்லு
- கள்ளன் கம்பு
- மறக்காணம்
சிலம்பாட்டத்தின் பயன்கள்:
சிலம்பம் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். சிலம்பம் சுற்றும்போது நம் உடலில் உள்ள நாடி, நரம்பு மற்றும் தசைகள் இயக்கப்படுகிறது.
சிலம்பை கையில் பிடித்து தன்னை சுற்றி சுற்றும் போது நம்மை சுற்றி ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். இது போன்ற வேலிக்குள் வேறு யாராவது நம்மை தாக்க முற்பட்டால் இந்த ஒரு கம்பினால் சுழற்றி அதனை தடுக்க முடிகிறது.
மேலும் உடல் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன் மற்றும் உடல் நெகிழ்வு தன்மை போன்றவற்றை பெற உடல் சிலம்பு பயிற்சி மிகவும் உதவுகிறது.
இதுபோன்று வரலாற்று தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | History in tamil |