தேஜா வூ என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Deja Vu Meaning in Tamil

Deja Vu in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! வாசகர்கள் அனைவருமே தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆங்கில மொழியில் எத்தனையோ வார்த்தைகள் இருக்கின்றன. அந்த வார்த்தைகள் அனைத்திற்கும் பல அர்த்தங்கள் இருக்கின்றன.

ஆனால் சிலர் ஒரு சில வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவார்கள். அதுவும் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலேயே அந்த வார்த்தையை கூறிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று தேஜா வூ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Bias என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா  இத்தனை நாளா இது தெரியாம போச்சே

Deja Vu Meaning in Tamil: 

பொதுவாக இந்த வார்த்தையை படத்தில் கூறி கேட்டிருப்போம். தேஜா வூ என்றால் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

தேஜா வூ என்பது ஒரு பிரஞ்சு சொல் ஆகும்.  தேஜா வூ என்ற வார்த்தைக்கு பிரஞ்சு மொழியில் ஏற்கனவே நடந்தது என்று அர்த்தம். உதாரணத்திற்கு நீங்கள் புதிதாக ஒரு இடத்திற்கு செல்கிறீர்கள் ஆனால் அந்த இடத்திற்கு நீங்கள் ஏற்கனவே சென்றது போல தோன்றும். அதை தான் தேஜா வூ என்று சொல்கிறார்கள்.  

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், உங்களுடைய நண்பர் அவருடைய நண்பரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறார். ஆனால் அவரை நீங்கள் ஏற்கனவே பார்த்தது போல தோன்றும். அதை தான் நாம் தேஜா வூ என்று சொல்கின்றோம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Ewe என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்