Ecs என்றால் என்ன? | What is Ecs in Tamil

Advertisement

Ecs Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ECS என்றால் என்ன என்பதை படித்து தெரிந்து கொள்வோம். இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான வார்த்தைகள் உபயோகப்படுத்தபடுகின்றன. நாம் உபோயோகப்படுத்தும் பல சொற்களுக்கு என்ன அர்த்தம் அது எதற்கு பயன்படுகிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. எல்லா வார்த்தைக்கும் அர்த்தம் தெரியவில்லை என்றாலும் நாம் உபயோகப்படுத்தும் சில வார்த்தைகளுக்கு அர்த்தத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அந்த வகையில் நாம் இந்த பதிவில் ECS என்பதற்கான அர்த்தம் மற்றும் ECS என்றால் என்ன என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Ecs full form in Tamil:

  • Electronic Clearing Service என்பதன் விரிவாக்கம் ஆகும்.

ECS meaning in Tamil:

  • நாம் வங்கிகளில் செலுத்த வேண்டிய அல்லது பெற வேண்டிய தொகையை மின்னணு தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக பரிமாற்றம் செய்து கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான முறையை நாம் ECS என்கிறோம்.
  • இதில் இரண்டு வகை உள்ளது ECS Debit, ECS Credit.

Ecs Debit Meaning in Tamil:

  • நாம் வங்கிக்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்துவதை இசிஎஸ் டெபிட் என்கிறோம். அதாவது வங்கிகள் மிகப்பெரிய அளவில் இருக்கும் கடன் தொகையை வசூலிப்பதற்கு இந்த முறை பயன்படுகிறது.
  • இதன் மூலம் தவணைத்தொகை, காப்பீட்டு சந்தா, மின்னணு கட்டணம் மற்றும் தொலைப்பேசி கட்டணம், தண்ணீர் கட்டணங்கள், இன்சூரன்ஸ் பிரிமீயம் தொகை போன்றவற்றை வங்கிகள் டெபிட் செய்து கொள்ள முடியும்.
  • நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும் போது கொடுக்கப்படும் படிவத்தை நன்கு படித்து கொள்ள வேண்டும்.
  • கட்ட வேண்டிய தவணை தொகை வங்கிக்கணக்கில் இல்லையெனில் ECS முறையில், அடுத்த முறை அதிகமாக கட்டணம் பிடித்தமாக Auto debit செய்யப்படும்.
  • தவணை தொகையை செலுத்தும் காலம் முடிவதற்கு முன்பாகவே நீங்கள் தொகையை கட்டி முடித்துவிட்டால் Debit mandate form NACH / ECS/ Direct debit என்ற form எழுதிக்கொடுத்து அதன் மூலம் ECS டெபிட்-யை நிறுத்திக்கொள்வது அவசியம்.

ECS Credit:

  • Ecs Meaning in Tamil: நாம் பெற்று கொள்ள வேண்டிய தொகையை நிதி நிறுவனங்கள் நம்முடைய வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்வதை இசிஎஸ் கிரெடிட் ஆகும். இதில் சம்பளம், ஓய்வூதியம், பங்குதாரர்களுக்கு வட்டி, டிவிடென்ட் முதலீட்டாளர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் போன்றவை அடங்கும்.
  • இந்த வசதியை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை வங்கிகளே நிர்ணயம் செய்து கொள்கின்றன.
  • இசிஎஸ் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடமிருந்து வங்கிகள் கட்டணத்தை பெற முடியும்.
  • நீங்கள் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும் போது உங்களுக்கான இசிஎஸ் தொகை எவ்வளவு வசூலிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.
  • மேலும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய ecs தொகையை வங்கிகள் கஸ்டமருக்கு நினைவுப்படுத்த வேண்டும்.
CTC பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

 

மேலும் இது போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –>  அர்த்தம்
Advertisement