Karthika Meaning in Tamil
பொதுவாக ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையினை செல்லம், ராசாத்தி, வைரம் மற்றும் மஹாலட்சுமி என்றெல்லாம் செல்ல பெயர் சொல்லி அழைப்பார்கள். அதோடு மட்டும் இல்லாமல் அந்த குழந்தைக்கு என்ன என்ன வேண்டுமோ அவற்றை எல்லாம் வாங்கி வந்து குழந்தைக்கு போட்டு அழகு பாப்போம். இப்படி இருக்கும் பட்சத்தில் என்ன தான் நாம் பெண் குழந்தைகளை செல்லமாக சொல்லி அழைத்தாலும் கூட நிரந்தரமான பெயர் வைப்பது என்பது சாத்தியமான ஒன்று. அப்படி பெயர் வைக்க வேண்டும் என்றவுடன் ஒவ்வொருவரும் குறைந்தபட்சமாக 5 முதல் 6 பெயரினை யோசித்து இறுதியாக ஏதோ ஒரு பெயரினை வைத்து விடுவார்கள். இவ்வாறு குழந்தைக்கு சூட்டப்படும் பெயருக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா..? அதனால் இன்று பெண் குழந்தைக்கு வைக்கும் பெயர்களில் ஒன்றான கார்த்திகா என்ற பெயரிற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கார்த்திகா பெயர் அர்த்தம்:
கார்த்திகா என்பதற்கு தேவதை, விளக்கு மற்றும் ஒளியின் தன்மை என்பது பொருள் ஆகும். அதேபோல் இந்த பெயர் ஆனது புத்திசாலித்தனம், புரிதல், பயமில்லாத, விசாரணை, பகுப்பாய்வு மற்றும் சுயமான என்பதையும் குறிக்கிறது.
இந்த பெயரினை கொண்டவர்கள் இயற்கையில் சில நேரத்தில் சுறு சுறுப்பு இல்லாதவர்களாக இருப்பார்கள். அதேபோல உள்ளத்தில் பயத்தினையும் வெளியில் பயம் இல்லாதவர் போலவும் வெளிக்காட்டி கொள்ளும் குணம் கொண்டவராகவும் திகழ்வார்கள்.
ஆனால் எந்த ஒரு செயலையும் சிந்தித்து அதில் இருக்கும் நுணுக்கங்களை ஆராய்ந்து அதில் வெற்றி காண வேண்டும் என்ற ஆர்வம் உடையவராக இருப்பார்கள். இப்படி இருந்தாலும் கூட எளிதில் உண்மையினை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இல்லாதவராகவும் இருப்பார்கள்.
மேலும் இந்த பெயரினை எந்த செயலிலும் தெளிவுடனும், பகுப்பாய்வுடனும் இருத்தல் வேண்டும் என்பது இவர்களின் குணங்களில் அடங்கிய ஒன்றாகும்.
ஸ்ரீ பெயர் அர்த்தம் | Sri Tamil Artham.. |
Karthika Name Numerology:
Name | Numerology Number |
K | 11 |
A | 1 |
R | 18 |
T | 20 |
H | 8 |
I | 9 |
K | 11 |
A | 1 |
Total | 79 |
கார்த்திகா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 79 என்பது வந்துள்ளது. இப்போது இதற்கான கூட்டு தொகையினை என்று பார்த்தால் (7+9)= 16 என்பதாகும்.
இப்போது மீண்டும் 16 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 16 என்பதற்கான கூட்டுதொகை (1+6) =7 என்பதாகும்.
ஆகவே நியூமராலஜி முறைப்படி கார்த்திகா என்ற பெயருக்கான அதிர்ஷ்டமான எண் 7 ஆகும்.
தர்ஷினி பெயர் அர்த்தம் என்ன | Dharshini Name Meaning in Tamil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |