MICR என்றால் என்ன..? MICR பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

MICR பற்றிய தகவல்கள் | MICR Meaning in Tamil..!

ஹலோ நண்பர்களே… இன்று நம் பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி பார்க்க போகிறோம். தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். MICR குறியீடு என்றால் என்ன..? அது எதற்கு பயன்படுத்தப்படுகிறது. MICR குறியீட்டின் பயன்பாடு என்ன..? இதுபோன்ற MICR குறியீட்டின் முழு தகவல்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் பாருங்கள் ⇒ IFSC Code என்றால் என்ன

MICR என்றால் என்ன..? 

MICR என்பதின் முழு விரிவாக்கம் ( Magnetic Ink Character Recognition ) என்பதாகும். இந்த MICR குறியீடுகள் பெரும்பாலும் வங்கி தொழில் துறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த குறியீடு வங்கி  துறையில் ஒரு சிறந்த தொழில்நுட்பமாக பயன்படுகிறது.

குறியீட்டில் கொடுக்கப்பட்டுள்ள முதல் 3 இலக்கங்கள் நகர்ப்புற குறியீட்டை குறிக்கிறது. நடுவில் இருக்கும் மற்ற எண்கள் வங்கி குறியீட்டை குறிக்கிறது. மற்ற 3 இலக்க எண்கள் கிளை குறியீட்டை குறிக்கின்றன.

இந்த MICR குறியீடானது மொத்தம் 9 இலக்க எண்களை கொண்டுள்ளது. இந்த குறியீடு வங்கி மற்றும் ஒரு கிளை Electronic Clearing Service என்பதில் பங்கு பெறுகிறது.  பொதுவாக இந்த MICR குறியீடுகள் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சிடப்படுகின்றன.

காசோலைகள் மற்றும் சான்று ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. MICR குறியீடு காசோலையின் கீழே வலது பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் இந்தியன் வங்கியின் IFSC CODE நம்பரை தெரிந்துகொள்ளுங்கள்

MICR குறியீட்டின் பயன்பாடு என்ன:

  • இந்த குறியீடானது E13-B அல்லது CMC-7 என்ற சிறப்பு எழுத்துக்களை கொண்டு அச்சிடப்படுகின்றன.
  • இந்த MICR குறியீடானது காசோலையின் செயலாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த குறியீடுகள் காசோலைகளை வேகமாக செயல்படுத்த உதவுகிறது.
  • இது முதலீட்டு படிவங்கள் அல்லது நிதி பரிமாற்றத்திற்கான படிவங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை படிவங்கள் போன்றவற்றை பூர்த்தி செய்யும் போது MICR குறியீட்டை குறிப்பிட வேண்டும்.
  • இந்த குறியீடுகள் காசோலைகளை அடையாளம் காண பயன்படுகிறது.
  • இதில் உள்ள எழுத்துக்கள் நிதி ஆவணங்களை படிக்க உதவுகின்றன.
  • இந்த MICR குறியீடுகள் காசோலை பற்றிய அனைத்து தகவல்களையும் கூறுகின்றன.
  • இந்த குறியீடுகள் காசோலைகள் போன்ற நிதி ஆவணங்களை விரைவாக பரிமாற்றம் செய்ய பயன்படுகிறது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement