நற்பவி என்றால் என்னனு தெரியுமா உங்களுக்கு..?

Advertisement

Narpavi Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்று நம் பதிவில்  நற்பவி என்றால் என்ன..? அவற்றின் அர்த்தம் என்னவென்று தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். நற்பவி ஆனது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். அதாவது ஒரு மகரிஷியால் உருவாக்கப்பட்ட மந்திரம் தான் நற்பவி என்று சொல்லப்படுகிறது. நற்பவி என்று பலபேரு கூற கேட்டு இருப்போம். ஆனால், நற்பவி என்றால் என்ன என்பதே நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நற்பவி என்பது காகபுஜண்டர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது ஆகும்.  மேலும் இவற்றின் முழு விவரகளையும் தெரிந்து கொள்வதற்கு பொதுநலம். காம் பதிவில் தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளலாம் வாங்க.

ஜோதிடம் என்றால் என்ன அவற்றை பற்றிய சில தகவல்கள்.

நற்பவி என்றால் என்ன..?

  • நற்பவி என்பதற்கு அர்த்தம் நல்லது நடக்கட்டும், நல்லவை உண்டாகட்டும் என்பது தான் இதனுடைய அர்த்தமாகும்.
  • நவிற்சி என்பது மிகவும் உயர்ந்த ஒரு மந்திரமாகும், இந்த மந்திரமானது காகபுஜண்ட மகரிஷியால் பண்டைய கால நூல்களில் இந்த மந்திரத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
  • இந்த மந்திரத்தை மோகன மந்திரம் என்றும் அழைக்கப்டுகிறது. இந்த நற்பவி என்ற சொல்லை மூன்று முறைக்கும் மேல் சொல்லிக்கொண்டே இருந்தால், நம் வீட்டில் உள்ள கஷ்டங்களும், உலகத்தில் வாழக்கூடிய அனைத்து மக்களின் கஷ்டங்களும் நீங்கிவிடும்.
  • நற்பவி மந்திரத்தை உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், இந்த  மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உங்களுடைய  எல்ல கஷ்டங்களும், கடன் பிரச்சனைகளும் தீர்வதற்கும், அனைத்து கெட்டதுகளும் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்காக சொல்லப்படுவதாகும்.
  • அதோடு அதிகமான கஷ்டங்கள் இருக்கும் பொழுது நற்பவி மந்திரத்தை சொல்லும் பொழுது அவை அஸ்திரம் என்றும் சொல்லப்படுகிறது. இதை சொல்வதினால் நம்மளுடைய கஷ்டங்களை காகபுஜண்ட மகரிஷியால் அவர்கள் நமக்கு அருள் வழங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

நற்பவி சொல்வதினால் ஏற்படும் நன்மைகள்:

  • இந்த நற்பவி மந்திரத்தை பூஜை அறையில் தான் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதேபோல் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நீங்கள் நினைக்கும் நேரங்களிலும் அல்லது உங்களுடைய மனதை ஒரு நிலை படுத்த வேண்டும் என்று நினைக்கும் பொழுது, இந்த ஓம்  நற்பவி என்ற மந்திரத்தை கூறினால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
  • அதே போல் இந்த நற்பவி மந்திரத்தை நோட்டில் மனதார சொல்லிக்கொண்டு எழுதும் பொழுது நமக்கு அதிகமான நேர்மறை ஆற்றலையும், பல நல்ல விசயங்களையும் தருவதற்கு உதவியாக இருக்கும். சிலருக்கு அதிகமான துன்பங்களும், துயரங்களும் அதிகமாக இருக்கும் அவர்களும் இந்த நற்பவி மந்திரத்தை எழுதினால் நல்லதே அமையும்.
  • ஒரு  சிலர் ஏதேனும்  பிரச்சனைகளில் சிக்கி கொண்டு இருக்கும் பொழுது நற்பவி என்று மூன்று முறைக்கு மேல் உச்சரிக்கும் பொழுது அந்த பிரச்சனைக்கான தீர்வுகளை அந்த பிரபஞ்சம் உங்களுக்கு தரும் என்றும் சொல்லப்படுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement