உங்கள் வீட்டில் கற்றாழை இருக்கிறதா..! இதை செய்திடுங்கள்..!

aloe vera face tips in tamil

கற்றாழை முகத்தில் பயன்படுத்துவது எப்படி..?

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் கற்றாழையை வைத்து என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்க போகிறோம். கற்றாழையை திருஷ்டிக்கு கட்டுவார்கள், அதேபோல் உடலிற்கு நிறைய விதமான சத்துக்களுக்கு பயன்படுத்துவார்கள், அதிலும் பெண்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. இன்னும் கற்றாழை நமக்கு நிறைய விதத்தில் பயனளிக்கிறது. அதேபோல் முகத்தில் நிறைய விதமான பிரச்சனைகள் ஏற்படும். அதற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான Face கிரீம்களை பயன்படுத்துவீர்கள். ஆனால் அனைத்திற்கு ஒரே மருந்தாக உள்ளது. வாங்க பார்ப்போம்.

கற்றாழை முகத்தில் பயன்படுத்துவது எப்படி?

டிப்ஸ்: 1

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் அழகை தருவது கண்கள் தான் அந்த கண்களுக்கு ஆண்களை விட பெண்களுக்கு தான் பாதிப்பு வருகிறது. அதாவது கண்களை சுற்றி கருவளையம் வந்து விடும். இதனால் பெண்களின் அழகு முற்றிலும் பாதிப்பு அடையும், அதனை சரி செய்ய மருந்தாக இருப்பது கற்றாழை ஜெல் ஆகும். முதலில் கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ளவும். தினமும் தூங்குவதற்கு முன் கண்களை சுற்றி தடவிக்கொள்ளவும். மறுநாள் காலையில் முகத்தை கழுவிக்கொள்ளவும். இதனால் கண்களில் இருக்கும் கருவளையம் மறையும் முகம் பொலிவு பெரும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 கூந்தல் வளர்ச்சிக்கு வீட்டிலே இயற்கையான கற்றாழை ஹேர் ஆயில்

டிப்ஸ்: 2

சிலருக்கு முகம் வெண்மையாக இருந்தாலும் சில இடங்களில் மட்டும் கருமையாக இருக்கும். ஆகையால் இரவு உறங்குவதற்கு முன் கருமை உள்ள இடத்தில் கற்றாழை ஜெல்லை வைத்து தடவி கொள்ளவும். 10 நிமிடம் மசாஜ் செய்து கொள்ளவும். மறுநாள் காலையில் எழுந்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவி கொள்ளவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கருமையாக இருக்கும் இடம் வெண்மையாக மாறிவிடும்.

டிப்ஸ்: 3

கற்றாழையில் வைட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளது. ஆகையால் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்பு முகத்தில் அப்பை செய்து 20 நிமிடம் ஊறவைத்து அதன் பின் கழுவிக்கொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் முகம் பொலிவாக இருக்கும்.

டிப்ஸ்: 4

 கற்றாழை முகத்தில் பயன்படுத்துவது எப்படி

முகத்தில் அதிகளவு பருக்கள் உள்ளவர்கள். அதனை போக்க கற்றாழை ஜெல் பெரிதும் உதவி செய்கிறது. தினசரி காலை மற்றும் மாலை நேரத்தில் 10 நிமிடம் கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெரும். அதேபோல் பருக்கள் இருக்காது.

டிப்ஸ்: 5

 கற்றாழை முகத்தில் பயன்படுத்துவது எப்படி

கற்றாழை ஜெல் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து பின்பு  அதனை தினமும் இரவு தூங்கும் முன் அந்த ஜெல்லை முகத்தில் தடவி கொள்ளவும். அதன் பின் காலையில் தண்ணீரில் கழுவி கொள்ளவும். முகம் பளிச்சென்று இருக்கும். மேக்கப் போட வேண்டாம்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 உங்கள் முகம் பால் போல் பளபளக்க கற்றாழை ஃபேஸ் பேக்..!

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Natural Beauty Tips