நரைமுடி கருப்பாக மாற | White Hair to Black Hair Dye Homemade
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கின்ற பிரச்சனையில் நரைமுடி பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நரைமுடியை மறைப்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டையை வாங்கி பய்னபடுத்துகிறார்கள். ஆனால் இந்த மாதிரி பயன்படுத்தும் போது நாளடைவில் உடல் ஆரோக்கியத்தில் கண்களில் பிரச்சனை மற்றும் கேன்சர் பிரச்சனை ஏற்படும். அதனால் நிரந்தரமாக இயற்கையான முறையில் நரைமுடியை கருப்பாக மாற்றுவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கற்றாழை ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்:
- கற்றாழை – 1
- அவுரி பொடி – 1 தேக்கரண்டி
- கடுக்காய் பொடி – 1 தேக்கரண்டி
- அவுரி பொடி – 2 தேக்கரண்டி
- மருதாணி பொடி – 2 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1/2 கப்
கற்றாழை டை செய்முறை:
இதையும் படியுங்கள் ⇒ இந்த ஒரு எண்ணெயை மட்டும் தலையில் தடவுங்க முடி காடு போல் வளரும்..!
முதலில் கற்றாழையை எடுத்து அதில் மஞ்சள் கலரில் வரும் ஜெல்லை கழுவி சுத்தமாக எடுத்து கொள்ளவும். பின் கற்றாழையின் தோலை நீக்கி ஜெல்லை மட்டும் 1/2 கப் எடுத்து மிக்சி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
அடுப்பில் இரும்பு கடாய் வைத்து மருதாணி பொடி, கடுக்காய் பொடி சேர்த்து கலந்து, அரைத்து வைத்திருக்கின்ற கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து விடவும். அது இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும்.
மறுநாள் காலையில் இந்த ஹேர் டையை தலையில் அப்ளை செய்வதற்கு முன் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்க வேண்டும். ஹேர் டையை அப்ளை செய்து 3 மணி நேரம் தலையில் வைத்து விட்டு பிறகு தலையை அலச வேண்டும். பிறகு அவுரி பொடியை இரும்பு கடாயில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை மறுபடியும் தலை முடி முழுவதும் அப்ளை செய்து 2 மணி நேரம் வைத்து விட்டு பிறகு தலையை அலசலாம்.
இந்த ஹேர் டையை 15 நாட்களுக்கு ஒரு முறை அப்ளை செய்தால் 5 முறையிலே நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஒரு முறை ட்ரை பண்ணுங்க நண்பர்களே.!
இதையும் படியுங்கள் ⇒ 100 % இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு ஹேர் டை..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |