முகம் தங்கம் போல் ஜொலிக்க எளிய அழகு குறிப்பு..! Tips For Facial At home..!
Facial Tips At home In Tamil: வணக்கம் தோழிகளே முகத்தை எப்படி இயற்கையான முறையில் எந்த வித கருந்தழும்புகள் இல்லாமல் பளீச்சென்று வைத்திருக்கலாம் என்று ஒரு சூப்பரான டிப்ஸ் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். சருமத்தினை அழகாகவும், பாதுகாப்பாகவும் வைப்பதற்கு பெண்கள் பெரிதும் மதிப்பு கொடுத்து வருகின்றனர். பெண்களுக்கு முகம் அழகாக வேண்டும் என்பதற்காக பல விதமான கிரீம் வகைகளை முகத்தில் அப்ளை செய்து முக அழகையே வீணடித்து கொள்கிறார்கள். சரி வாங்க இந்த பதிவில் எளிமையான முறையில் முகத்தினை வெள்ளையாக மாற்றும் முறையை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
![]() |
தேவையான பொருட்கள்:
- காபி தூள்- 1/4 ஸ்பூன்
- கடலை மாவு – 1/2 ஸ்பூன்
- தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
டிப்ஸ் 1:
முகம் அழகாக இருக்க ஒரு சுத்தமான பவுலில் 1/4 ஸ்பூன் அளவிற்கு காபி தூளை எடுத்து கொள்ளவும். காபி தூள் நம் முகத்தினை சுத்தம் செய்து வெள்ளையாக மாற்றும் தன்மை கொண்டது.
சிலருக்கு முகம் எப்போதும் கருமையாக இருக்கும். அவர்கள் காபி தூளுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து தடவி வர முகம் நல்ல வெண்மை கொடுக்கும்.
டிப்ஸ் 2:
அடுத்து பவுலில் காபி தூளுடன் 1/2 ஸ்பூன் அளவு கடலை மாவினை சேர்த்து கொள்ளவும். கடலை மாவினை நீரில் சேர்த்து முகத்தில் தடுவுவதால் சருமமானது வறண்டு போய்விடும். அதனால் கடலை மாவுடன் பால், தயிர் போன்றவை சேர்த்து தடவி வருவது நல்லது.
![]() |
டிப்ஸ் 3:
கடலை மாவினை சேர்த்த பிறகு தயிர் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது இவற்றை நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அவ்ளோதாங்க இந்த ரெமிடி தயார்.
இவற்றை நீங்கள் ஏதேனும் விசேஷங்களுக்கு செல்லும் போதோ, அல்லது சாதாரண நாளில் செய்தாலும் இரவு படுக்கைக்கு முன் தடவி முகத்தில் இருந்து 10 -20 நிமிடம் கழித்து வாஷ் செய்யலாம்.
குறிப்பு:
முகத்தில் ஏதேனும் மேக் அப் செய்திருந்தால் அதனை அகற்றிய பிறகு தான் இந்த ரெமிடியை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
இந்த டிப்ஸை பாலோ செய்தால் உடலில் இரத்த சுழற்சி அதிகரிக்க செய்யும். அதோடு முகத்தில் கன்னம் பகுதிகள் அனைத்தும் வெள்ளையாகவும் வழுவழுப்பான தன்மையை கொடுக்கும்.
முகத்தில் நன்றாக அப்ளை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து நீரில் வாஷ் செய்யலாம். தயிரில் இயற்கையாகவே லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. அதனுடன் சேர்த்து கடலை மாவு, காபி தூள் சேர்த்து பயன்படுத்துவதால் நம் முகத்தில் உள்ள கருமையினை நீக்கிவிடும்.
இந்த டிப்ஸை தொடர்ந்து 3 நாட்கள் அல்லது வெளியில் செல்லும் முன் நாள் இதனை செய்யலாம். இந்த டிப்ஸை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க முகம் கண்டிப்பாக வெள்ளையாக மாறும்.
![]() |
இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |