பொடுகு வர காரணம் மற்றும் அதனை எப்படி தடுப்பது சூப்பர் ஐடியா.!

Advertisement

பொடுகு வர காரணம் என்ன.?

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் பொடுகு வர காரணம் மற்றும் வரமால் தடுப்பதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வோம். ஆண்கள்,பெண்கள் என்று அனைவருக்கும் ஏற்பட கூடிய பிரச்சனை. பொடுகு இருந்தாலே தலை அரிக்கும். தலை சொரியும் போது பொடுகு உடையின் மீது கொட்டும். அதற்காக பல ஷாம்பு, oil என்று பல முறைகளில் ட்ரை பண்ணுவோம். ஆனால் பொடுகு வந்ததுக்கு பிறகு அதற்காக வைத்தியங்கள் செய்வதை விட பொடுகு வர காரணமும் அது வராமல் எப்படி தடுப்பது என்று தெரிந்துகொண்டாலே இந்த பிரச்சனை எல்லாம் சமாளிக்கலாம். வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ பொடுகு தொல்லை நீங்க இயற்கை வழிகள்

பொடுகு வர காரணம்:

அதிக அளவு சர்க்கரை உள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் பொடுகு ஏற்படுகிறது.

தலையில் பூஞ்சை தொற்று வந்தாலும் பொடுகு ஏற்படும்.

தலை முடிக்கு தேவையான அளவு ஷாம்பு போடாமல் இருந்தாலும் அழுக்கு தேங்கி பொடுகாக மாறும். அதே மாதிரி ஷாம்பூ நிறைய போட்டாலும் தலை வறண்ட நிலை ஏற்பட்டு பொடுகு ஏற்படும்.

வெயிலில் அதிகம் நேரம் இருப்பது மற்றும் தலையில் தூசி சேர்ந்தாலும் பொடுகு ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தலை குளிக்காமல் அழுக்கு இருந்தாலும் பொடுகு ஏற்படும்.

பொடுகு வராமல் தடுக்க | How to Prevent Dandruff Naturally in Tamil 

பொடுகு பிரச்சனை வராமல் இருப்பதற்கு முதலில் வாரத்தில் 3 முறை தலை குளிக்க வேண்டும். இப்படி குளிக்கும் போது தலையில் உள்ள எண்ணெய் பசையின் அளவு குறைவாக இருக்கும். இதனால் பொடுகு வராமல் தடுக்கலாம்.

சிந்தடிக் பொருட்களான  தொப்பி, ஸ்கார்ப் போன்றவற்றை அதிக  நேரம் பயன்படுத்தக் கூடாது.

நீங்கள் தலை குளிக்கும் போது பயன்படுத்தும் ஷாம்பானது பொடுகை கட்டுபடுத்த கூடிய ஷாம்பை பயன்படுத்துவது நல்லது. ஜிங் பைரிதியோன், சாலிசிலிக் ஆசிட், செலினியம் சல்பைட், கீட்டோகோனசோல் ஆகிய மூலப்பொருட்கள் அடங்கிய ஷாம்புகள் பொடுகு வராமல் பாதுகாக்கும்.

உங்கள் தலை ஈரமாக இருக்கும் போது தலை பின்ன கூடாது.

தலையணை, போர்வை, உட்காரும் நாற்காலிகள், ஹெல்மெட் போன்றவற்றை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

நண்பர்களே மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்தால் பொடுகு பிரச்சனையிலுருந்து விடுபடலாம்.

 

இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Heath Tips In Tamil
Advertisement