சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா? அதற்கான டிப்ஸ் இதோ

dry skin

சரும வறட்சிக்கு டிப்ஸ்..!

தற்போது பனிக்காலம் துவங்கி விட்டது, இந்த காலத்தில் அதிக சரும பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். குறிப்பாக பனி காலத்தில் சருமம் ஈரப்பதத்தை இழந்து வறட்சியின் காரணமாக சருமம் வறண்டு பொலிவிழந்து (dry skin) காணப்படும். இந்த பிரச்சனையை எப்படி எதிர் கொள்வது என்பதை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் காணப்போகிறோம்.

சரி வாங்க பனி காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனையை எப்படி சரி செய்வது என்பதை பற்றி நாம் காண்போம்.

கற்றாழை:

கற்றாழை சருமத்தில் ஏற்படும் வறட்சியை (dry skin) சரி செய்வதற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கற்றாழையில் உள்ள பண்புகள் சருமத்தில் உள்ள ஈரப்பசையை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.

எனவே வறட்சியான சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் சிறிது நேரம் தடவி, மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தன்மை, மாறி சருமம் பொலிவுடன் வைத்துக்கொள்ள பெரிதும் கற்றாழை உதவுகிறது.

பப்பாளி:

நன்றாக கனிந்த பப்பாளியை எடுத்து கொள்ளவும். அவற்றை நன்றாக மசித்து கொள்ளவும், இந்த மசித்த பப்பாளியை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சரும வறட்சி மாறி முகம் எப்போது ஜொலிப்பாகவே இருக்கும்.

அவகோடா:

ஒரு அவகோடா பழத்தை எடுத்து கொள்ளவும், அவற்றை நன்றாக அரைத்து இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் வரை காத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் போதும் சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்தி, சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும்.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயை அரைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முகம் மற்றும் வறட்சி பகுதிகளில் தடவி 15 நிமிடம் வரை காத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சரும வறட்சி பிரச்சனை சரியாகும்.

சூரிய கதிர்களால் ஏற்பட்ட சரும பிரச்சனைக்கு அதிக தீர்வு தருகிறது.

வேப்பெண்ணெய்:

சரும வறட்சியால் தினமும் பாதிக்கப்படுபவர்கள் வேப்பெண்ணெய்யை கைகால்கள் மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் சரும வறட்சி மாயமாக மறைந்து போய்விடும்.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் ஆயிலை மிதமான சூட்டில் சுடவைத்து, பின்பு அந்த எண்ணெயை உடல் மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவி சிறிது நேரம் வரை காத்திருந்து, பின்பு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் குளித்து வரவும். இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் வறட்சியை விரட்டி அடிக்கலாம்.

குறிப்பு

இயற்கை வழிகளை பின்பற்றுவதுடன் உடலுக்கு தேவையான அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை தினமும் உண்டு வர வேண்டும்.

தினமும் உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தி வர வேண்டும்.

பனி காலத்தில் குளிப்பதற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவு, பயத்தமாவு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE