வெளியில் செல்லும் போது முகம் பிரகாசமாக இருக்க இந்த ஒரு பேக் போதும்

face brightening tips in tamil

முகம் அழகாக என்ன செய்ய வேண்டும்

வணக்கம் நண்பர்களே.! நீங்கள் ஏதும் சுப நிகழ்ச்சிகள் வந்தாலே முகம் அழகாக இருக்க வேண்டும் என்று பார்லருக்கு செல்லுவீர்கள். ஆனால் அந்த மேக்கப் கொஞ்சம் நேரம் தான் முகத்தை பிரகாசிக்க வைக்கும். நீங்கள் இயற்கையான முறையில் முகத்தை அழகாக்கினால் பிரகாசமாக இருக்கும். உங்களுக்கு உதவும் வகையில் ஒரு அருமையான குறிப்பை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த குறிப்புகளை நீங்கள் அப்ளை செய்தாலே பார்லருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

முகம் அழகு பெற என்ன செய்ய வேண்டும்:

குறிப்பு:1

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் காபி தூள் 2 தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கொள்ளுங்கள். பின் பன்னீர் சிறிதளவு, ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து கட்டி இல்லாமல் கலந்தால் ஒரு பேஸ்ட் போல கிடைத்துவிடும். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தம் முகத்தை பளபளப்பாக்க கூடியது. மேலும் கருவளையம் உள்ளவர்களும் இந்த பேஸ் பேக்கை அப்ளை செய்தால் நல்ல பலனை கொடுக்கும். 

இதையும் படியுங்கள் ⇒ உப்பை பயன்படுத்தி நம் ஸ்கின் கலரை அதிகரிக்கலாம்..! இனி தேவையில்லாத டிப்ஸை பாலோ பண்ணாதீங்க..!

இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து ஒரு 10 நிமிடம்  அப்படியே இருக்கட்டும். பிறகு முகத்தில் அப்பளை செய்த பேக் காய்ந்ததும் மறுபடியும் இந்த பேஷ் பேக்கை அப்பளை செய்யுங்கள். 10 நிமிடம் கழிந்ததும் சுத்தமான நீரில் முகத்தை கழுவி வடியுங்கள். இப்பொழுது முகத்தை பாருங்கள் தங்கம் போல் ஜொலிக்கும்.

குறிப்பு:2

ஒரு தக்காளியை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளுங்கள். பின் சிறிய தட்டில் சிறிதளவு சீனி சேர்த்து கொள்ளுங்கள். நறுக்கிய ஒரு பாதி தக்காளியில் சீனியை அப்பளை செய்யுங்கள். இந்த தக்காளியை இரவு தூங்குவதற்கு முன்பு முகம் முழுவதும் தடவுங்கள். காலை எழுந்ததும் முகத்தை சுத்தமான நீரில் கழுவுங்கள். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் முகம் கலராகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

குறிப்பு:3 

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் பாலாடை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு சேர்த்து கலந்து விடுங்கள். இந்த பேக்கை குளிப்பதற்கு முன்பு அப்பளை செய்யுங்கள். 1/2 மணி நேரம் கழித்ததும் குளித்து விடுங்கள். இந்த பேக்கை வாரத்தில் 3 முறை அப்ளை செய்யுங்கள். உங்களது முகம் எப்பொழுதும் பிரைட் ஆக இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil