முக கருமை, பரு நீங்க இரவில் 10 நிமிடம் இதை தேய்த்தால் போதும்..!

Advertisement

வீட்டிலே முகப்பருவிற்கு எளிமையான தீர்வு..! Homemade Face Pack For Pimples..! 

Face Pack Homemade Tips For Glowing Skin: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம் பதிவில் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கருமையினை நிரந்தரமாக நீக்கக்கூடிய ஒரு எளிமையான பேஸ் பேக்கை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். கடைகளில் விற்கக்கூடிய கிரீம் வகைகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து இது போன்று வீட்டில் உள்ள எளிமையான பொருளை வைத்து முகத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். இதனால் சருமத்திற்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது. சரி வாங்க தோழிகளே இப்போது இந்த பேஸ் பேக்கினை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி விரிவாக படித்தறியலாம்..!

newமூன்றே நாளில் முகப்பருவிற்கு உடனடிதீர்வு..!

Turmeric And Honey Face Pack – தேவையான பொருட்கள்:

  1. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 
  2. தேன் – 3 டீஸ்பூன் 

செய்முறை:

Face Pack Homemade Tips For Glowing Skinமுதலில் சுத்தமான பவுலில் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் தூளுடன் 3 டீஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்துக்கொள்ளவும்.

மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்த பிறகு இரண்டையும் நன்றாக கலந்துக்கொள்ளவும்.

Face Pack Homemade Tips For Glowing Skinஇரண்டையும் நன்றாக கலந்த பிறகு சருமத்தில் இப்போது அப்ளை செய்யவேண்டும். இந்த டிப்ஸை தினமும் தவறாமல் முகத்தில் தடவிவர வேண்டும்.

சருமத்திற்கு கிடைக்கும் மாற்றம்:

face pack homemade tips for glowing skinமஞ்சள் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி வருவதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்துவிடும். அதோடு மஞ்சள் மற்றும் தேனானது உடல் தோலின் நிறத்தை மேம்படுத்த செய்கிறது.

சருமத்தினை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும். சருமத்தில் உள்ள கறைகளை நீக்கிவிடும்.

Aloe Vera And Honey Face Pack – தேவையான பொருட்கள்:

  1. தேன் – 2 டீஸ்பூன் 
  2. கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன் 

செய்முறை:

face pack homemade tips for glowing skinசருமத்தில் நிரந்தரமாக பருக்கள் மறைவதற்கு ஒரு பவுலில் 2 டீஸ்பூன் அளவிற்கு தேனை எடுத்துக்கொள்ளவும். தேனுடன் 1 டீஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை எடுத்து சேர்த்துக்கொள்ளவும்.

 

இப்போது பவுலில் சேர்த்த தேன் மற்றும் கற்றாழை ஜெல்லை நன்றாக கலந்துக்கொள்ளவும்.

face pack homemade tips for glowing skinஇரண்டனையும் நன்றாக மிக்ஸ் செய்த பிறகு முகத்தில் தினமும் இதை தடவிவர வேண்டும்.

சருமத்திற்கு கிடைக்கும் மாற்றம்:

face pack homemade tips for glowing skinஇந்த டிப்ஸை தொடர்ந்து பாலோ செய்து வந்தால் தெளிவான சருமம் கிடைக்கும். கற்றாழை ஜெல்லானது சருமத்தில் உள்ள பருக்கள், கருந்திட்டுக்கள், அழுக்குகள், வறட்சியான சரும பிரச்சனை அனைத்தையும் சரி செய்யும்.

கற்றாழை உங்களுடைய தோலிற்கு இயற்கையான ஈரப்பதத்தினை சேர்க்கிறது. அதோடு முகத்தினை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்கும். கற்றாழையானது பாக்டீரியாவை எதிர்க்கும் சிறந்த மூலப்பொருளாகும்.

face pack homemade tips for glowing skinதேனானது சருமம் மற்றும் தோல் பகுதியினை மேம்பட உதவியாக இருக்கிறது. தேன் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி எப்போதும் இளமை தோற்றத்துடன் வைத்திருக்கும்.

அடுத்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்கும். இந்த டிப்ஸினை தொடர்ந்து பாலோ செய்து பாருங்கள். முகத்தில் மாற்றம் அடைவது உங்களுக்கே தெரியும்.

newமுகத்தை பிரகாசமாக மாற்றும் கற்றாழை பவுடர்..! Aloe Vera Powder Benefits For Face..!
இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement