Face whitening tips tamil..! Mugam vellaiyaga tips..! முகம் சிவப்பாக டிப்ஸ்..!
முகம் வெள்ளையாக (Mugam vellaiyaga tips) வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. தினமும் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தெரியாமல் சரும நிறத்தை அதிகரிக்க பலவகையான முயற்சிகளை எடுத்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அவற்றில் சிலர் கடைகளில் விற்கப்படும் பலவகையான கிரீமினை வாங்கி பயன்படுத்துகின்றன. இருப்பினும் முகம் வெள்ளையாக (Mugam vellaiyaga tips) இயற்கை முறைகளை பின்பற்றினால் அதனால் கிடைக்கும் பலன் நிரந்தரமாக அமையும்.
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் |
சரி இந்த பதிவில் முகம் சிவப்பாக பின் பற்ற வேண்டிய சில இயற்கை அழகு குறிப்புகளை பதிவு செய்துள்ளோம். அதனை முகம் வெள்ளையாக வேண்டும் என்று நினைப்பவர்கள், தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயம் நீங்களும் வெள்ளையாகலாம்.
Fast Skin Whitening Tips In Tamil |
ஒரே நாளில் முகம் வெள்ளையாக டிப்ஸ்..!
Face whitening tips tamil – Mugam vellaiyaga tips – முகம் சிவப்பாக டிப்ஸ்: 1
சருமத்தில் உள்ள கருமைகள் நீங்க tomato face pack தயார் செய்யலாம் வாங்க.
Tomato face pack செய்ய தேவையான பொருட்கள்:
- தக்காளி – 1/2
- கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
- அரிசி மாவு – 2 ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
Tomato face pack செய்முறை:
அரை தக்காளி பழத்தை எடுத்து நன்றாக பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள்.
பின் அவற்றை நன்றாக வடிகட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை சருமத்தை நன்றாக கழுவியபின்பு அப்ளை செய்யுங்கள், பின் 30 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை தெடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி முகம் வெள்ளையாக மற்றும் சிவப்பாக காணப்படும்.
Homemade Face Wash Powder In Tamil |
Face whitening tips tamil – Mugam vellaiyaga tips – முகம் சிவப்பாக டிப்ஸ்: 2
சிலருக்கு முகம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும் அப்படிப்பட்டவர்கள் இந்த potato face pack ட்ரை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
potato face pack செய்ய தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 1/2
- காய்ச்சாத பசும் பால் – 50 மில்லி
- கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
potato face pack செய்முறை:
அரை உருளைக்கிழங்கை எடுத்து நன்றாக தோல் சீவி துருவி கொள்ளுங்கள்.
பின் ஒரு வடிகட்டிய எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் துருகிய உருளைக்கிழங்கை சேர்த்து வடிகட்டிக்காட்டி சாறு பிழிந்து கொள்ளுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு சாறுடன் 50 மில்லி பால் மற்றும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து பின் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருந்து பிறகு சருமத்தை சுத்தமாக கழுவுங்கள். இவ்வாறு செய்வதினால் முகம் பொலிவுடனும் குறிப்பாக முகம் வெள்ளையாக (Mugam vellaiyaga) காணப்படும்.
Face whitening tips tamil – Mugam vellaiyaga tips – முகம் சிவப்பாக டிப்ஸ்: 3
சிலருக்கு முகம் வறட்சியாக காணப்படும், அவர்கள் இரண்டு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு காய்ச்சாத பசும் பால் சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வருவதினால் சரும வறட்சி நீங்குவதோடு, முகம் பளிச்சென்று மற்றும் முகம் வெள்ளையாக (Mugam vellaiyaga) காணப்படும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |