Facial At Home Remedies in Tamil
இக்காலத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே முகத்தை அழகுபடுத்த பார்லருக்கு சென்று பேசியல் செய்வார்கள். ஆனால் அதற்கு நிறைய செலவாகும். பலவகையான பேசியல் இருக்கிறது. ஒவ்வொரு பேசியலுக்கும் ஒவ்வொரு விதமான தொகை இருக்கும். ஆனால் பார்லருக்கு போகாமலே வீட்டில் இருந்தே பேசியல் செய்யலாம். அதுவும் வெறும் 5 ரூபாய் செலவில்..! இந்த பேசியலை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பண்ணலாம். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குககளை நீக்கி முகத்தை வெள்ளையாக்கும் கோல்டன் பேசியல் வீட்டிலே எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Homemade Facial For Glowing Skin in Tamil:
பேசியல் செய்ய தேவையான பொருட்கள்:
- கேரட் – 1
- தயிர் – 3 ஸ்பூன்
- தேன் – 1/2 ஸ்பூன்
- அரிசி மாவு – 1 ஸ்பூன்
- கடலை மாவு – 1 ஸ்பூன்
How To do Facial At Home in Tamil:
முதலில் கேரட்டை நன்றாக கழுவி விட்டு துருவி கொள்ளுங்கள். அதன் பின், அதில் உள்ள சாறை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளுங்கள். இந்த கேரட் சாறை பயன்படுத்திதான் பேசியல் பண்ண போகிறோம்.
Cleansing:
Cleansing செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் கேரட் சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடத்திற்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு ஒரு காட்டன் துணியால் துடைத்து விடுங்கள்.
Cleansing செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி விடும்.
கற்றாழையுடன் இந்த பொருளை கலந்து போட்டால் போதும் 5 நாட்களிலேயே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்..! |
Scrubbing:
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் கேரட் சாறு மற்றும் 1/2 ஸ்பூன் அரிசி மாவு எடுத்து கொள்ளுங்கள். இதை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இவற்றை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடத்திற்கு தேய்த்து விடுங்கள்.பிறகு இதை ஒரு காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள்.
Scrubbing செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் எல்லாம் நீங்கி முகம் வெண்மையாகும்.
குறிப்பு:
முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் Scrubbing செய்வதை தவிர்க்க வேண்டும்.
Face Pack:
ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் கேரட் சாறு எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 1 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடம் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் வரை உலர விட்டு பிறகு தண்ணீர் வைத்து முகத்தை கழுவி விடுங்கள்.
பேஸ் பேக் போட்ட பிறகு உங்கள் முகம் பொலிவாகவும் வெண்மையாகவும் இருக்கும்.
7 நாட்களில் முடி அசுர வளர்ச்சி அடைய இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க போதும் |
Moisturize:
பேஸ் பேக் போட்ட பிறகு நீங்கள் பயன்படுத்தும் Moisturize கிரீமை அப்ளை செய்து விடுங்கள்.
இந்த பேசியலை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் உங்கள் முகம் வெண்மையாக மாறுவதை பார்ப்பீர்கள்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |