காசு கொடுத்து பேஷியல் செய்வதை விட இந்த பேஷியல் செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.!

facial at home with home remedies in tamil

பேஷியல் டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே.! வீட்டில் இருக்கும் பெண்களும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களும் சரி பேசியல் செய்யாமல் இருக்க மாட்டார்கள். தினமும் செய்யா விட்டாலும் மாதத்தில் ஒரு முறையாவது பேசியல் செய்து விடுவார்கள். வேலைக்கு போகும் சில பெண்களுக்கு பார்லர் செல்வதற்கு நேரம் இருக்காது. நீங்கள் இனிமேல் காசு கொடுத்து பேசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த பதிவில் கூறியிருக்கும் குறிப்பை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.! நண்பர்களே.!

வீட்டிலேயே பேசியல் செய்வது எப்படி.?

 பேஷியல் செய்யும் முறை

ஸ்டேப்:1

 முதலில் நீங்கள் எந்த குறிப்பை பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். உங்களின் முகத்தில் உள்ள கிருமிகளோடு எந்த குறிப்பை பயன்படுத்தினாலும் பயன் அளிக்காது.  இப்போது குறிப்பை தெரிந்துகொள்வோம் வாங்க.!

ஸ்டேப்:2

முகத்திற்கு பேஷியல் செய்வதற்கு பசும் பாலை எடுத்து கொள்ளுங்கள். இந்த பசும்பாலை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ Beauty parlour சென்று Facial போட முடியலன்னு கவலைப்படாதீங்க..! ஏனென்றால் வீட்டிலேயே Facial போடலாம் வாங்க.!

ஸ்டேப்:3

பிறகு சிறிய கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு 1 தேக்கரண்டி, பால் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 5 நிமிடம் கழித்து முகத்தை துடைத்து விடுங்கள்.

ஸ்டேப்:4

அடுத்து ஒரு கிண்ணத்தில் தயிர் 1 தேக்கரண்டி, பீட்ரூட் சாறு 1 தேக்கரண்டி சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இந்த பேக்கை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தி துடைத்து விடுங்கள்.

ஸ்டேப்:5

அடுத்து ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு 2 தேக்கரண்டி, பீட்ரூட் சாறு 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி பால், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்யுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான நீரில் கழுவி விடுங்கள்.

ஸ்டேப்:6

இந்த பேஷியலை மேல் கூறப்பட்டுள்ள வரிசையில் தான் செய்ய வேண்டும். இந்த குறிப்பை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினாலும் முகத்தில் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாது. நீங்கள் ஏதும் சுப நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது இந்த குறிப்பை மட்டும் பயன்படுத்தி பாருங்கள். மற்றவர்கள் பார்த்து ஆச்சிரியப்படும் அளவிற்கு உங்களின் முகம் ஜொலிக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களின் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த ஒரு பேசியல் மட்டும் பண்ணீங்கன்னா செம கலரா ஆகிடுவீங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil