Fast Hair Growth Oil Homemade in Tamil
ஆண்கள் முதல் பெண்கள் வரை பார்க்கும் வேலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் உடலுக்கும் உங்களின் தலைமுடிக்கும் கொடுப்பதில்லை. அப்படி கொடுத்திருந்தால் இன்று இந்த பதிவை படிக்கவே தேவையில்லை. உங்களில் யாருக்கு தலை முடி நீளமாகவும் கருமையாகவும் வளர வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அப்படி உங்களுக்கு இந்த எண்ணெய் வேண்டுமென்றால் உடனே வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
அதற்கு முன் உங்களின் முடியை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி தெரித்துக் கொள்ளலாம். பொதுவாக தலையை அழுக்கு இல்லாமல் வைத்துக்கொள்ளவும். அதுபோல் முக்கியமாக தலை குளித்து ஈர தலையுடன் பின்னுவது தவறு. அதனாலும் உங்கள் தலை முடி வளராமல் இருக்கும்..! இதுபோன்ற சில தவறுகளை செய்வதால் தான் முடி உதிர்வுக்கு காரணமாக உள்ளது. சரி உங்கள் முடி நீளமாகும் கருமையாகவும் வளர்வதற்கு இயற்கை ஹேர் ஆயில் செய்வது பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Fast Hair Growth Oil Homemade in Tamil:
தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை – 2 கைப்பிடி
- செம்பருத்தி இலை – 2 கைப்பிடி
- மருதாணி இலை – 2 கைப்பிடி
- வேப்பிலை – 1 கைப்பிடி
- துளசி – 1 கைப்பிடி
- கற்றாழை – 2
- பாதம் ஊறவைத்து – 15
- வெந்தயம் – 100 கிராம்
- சின்ன வெங்காயம் – 20
- பச்சை அரிசி – 5 டேபிள் ஸ்பூன்
- தேன் – 100 கிராம்
- ஆவாரம் பூ பொடி – 50 கிராம்
- எலுமிச்சை பழச்சாறு – 5 பழம்
- நல்லெண்ணெய்
- விளக்கெண்ணெய்
- தேங்காய் எண்ணெய்
Fast Hair Growth Oil Homemade in Tamil:
முதலில் மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அந்த மிக்சி ஜாரில் மேல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அனைத்தையும் ஒரே மிக்சி ஜாரில் சேர்த்து தான் அரைக்க வேண்டும். அனைத்தும் ஒன்றாக அரைக்க முடியாது. ஆகையால் ஒவ்வொன்றாக அரைத்து கடைசியில் ஒரே மிக்சியில் அரைத்துக்கொள்ளவும் கிரைண்டரில் போட்டு கூட அரைத்துக் கொள்ளலாம்.
கற்றாழை ஜெல் மட்டும் எடுத்து அதனை தண்ணீருக்கு பதிலாக அரைத்துக் கொள்ளலாம். இதனை பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
நாம் அரைத்ததை எடுத்து ஒரு துணியில் உருண்டை உருண்டையாக எடுத்து காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை முதலில் ஒரு நாள் முழுவதும் மிதமாக வெயிலில் காயவைக்கவும். அதன் பின்பு வெயிலில் போட்டு காயவைக்கவும்.
முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறது என்று கவலைப்படுபவர்கள் இந்த மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
அடுத்து ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் 1 லிட்டர் ஊற்றிக்கொள்ளவும். அதன் பின்பு அதில் 50 நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கொதித்த பின்பு அதில் இந்த காயவைத்துள்ள உருண்டைகளை சேர்க்கவும். அதை நன்கு அந்த எண்ணெயுடன் கலந்துவிடவும். உருண்டைகள் எண்ணெய்க்கு தேவையான அளவு சேர்க்கவும்.
அது ஓரளவு நன்கு கொதிக்கவும். அதன் பின்பு அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதனை வடிகட்டாமலும் நாம் பயன்படுத்தலாம். இப்போது ஒரு பாட்டிலில் ஊற்றவும். அதில் வெட்டி வேர் இருந்தால் அதனையும் சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவு தான் எண்ணெய் தயாராகிவிட்டது.
உங்கள் முடி கட்டுக்கடங்காமல் காடு போல வளர இதை மட்டும் தடவுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |