வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த ஆயில் ஒன்னு போதும் வழுக்கை தலையில் கூட முடி வளர செய்யும்..!

Updated On: October 3, 2024 12:03 PM
Follow Us:
Fast Hair Growth Oil Tamil
---Advertisement---
Advertisement

Fast Hair Growth Oil Tamil

Homemade hair oi in tamil – முடி வளர்ச்சியை அதிகரிக்க பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே பல விதமான டிப்ஸை பாலோ செய்கின்றன. அவர்களுக்கு உதவிடும் வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க இங்கு ஒரு அருமையான எண்ணெய் தயாரிப்பு முறையை பற்றி பார்க்கலாம். இந்த எண்ணெயை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். தலைமுடி உதிர்வு, வழுக்கை தலையில் முடி வளர, பொடுகு பிரச்சனை சரியாக, தலை அரிப்பு போன்ற தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த ஆயிலை எப்படி தயார் செய்யலாம், இதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் போன்ற விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. கறிவேப்பிலை – ஒரு கையளவு
  2. பூண்டு – ஒரு கையளவு
  3. நறுக்கிய வெங்காயம் – ஒரு கையளவு
  4. நறுக்கிய பெரிய நெல்லிக்காய் – ஒரு கையளவு
  5. வெந்தயம் – இரண்டு ஸ்பூன்
  6. கருஞ்சீரகம் – இரண்டு ஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் – 3/4 லிட்டர்
  8. விளக்கெண்ணெய் – 20 ml 

செய்முறை – Hair oil for hair growth in tamil:

fast hair growth oil tamil

ஸ்டேப்: 1

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கருவேப்பிலை, பூண்டு, நெல்லிக்காய், வெங்காயம் இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு மற்றொரு மிக்ஸி ஜாரில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து கொஞ்சம் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

இப்பொழுது அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து அதிலில் 3/4 லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்த்து சூடுபடுத்தவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்தினால் முடி காடுபோல் வளரும்..!

ஸ்டேப்: 4

எண்ணெய் மிதமான அளவு சூடானதும் அதில் முதலில் அரைத்த கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் மற்றும் நெல்லிக்காய் கலவையை சேர்த்து கிளறவும். இந்த சமயத்தில் அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 5

20 நிமிடம் கலவையை கொதிக்கவைக்கவும். 20 நிமிடம் கழித்து பொடியாக அரைத்த வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் பொடியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.

ஸ்டேப்: 6

5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து தயார் செய்த கூந்தல் எண்ணெயை நன்றாக ஆறவைக்கவும். எண்ணெய் முழுமையாக ஆறியதும் மூடி போட்டு ஒரு நாள் முழுவதும் நன்றாக அந்த இரும்பு வாணலியில் ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 7

பிறகு மறுநாள் எண்ணெயை ஒரு பாட்டிலில் வடிகட்டி அதனுடன் 20 ml விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துவிடவும் பிறகு தலைக்கு தினமும் கூந்தல் எண்ணெயாக பயன்படுத்திவரலாம்.

ஸ்டேப்: 8

இந்த எண்ணெய் பயன்படுத்திய இரண்டு வாரத்திலேயே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி நீளமா அடர்த்தியா வளர தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு எண்ணெய் சேர்த்து தலையில் தடவி போதும்!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!