முகம் சிவப்பழகு பெற பியூட்டி டிப்ஸ்..! Fast Skin Whitening Tips Home Remedies..!
Fast Skin Whitening Tips Home Remedies:- ஹாய் பிரெண்ட்ஸ் இன்று நாம் வீட்டில் இருந்து செய்ய கூடிய சில எளிமையான அழகு குறிப்பு டிப்ஸினை பார்க்கலாம். அதாவது சரும அழகை கெடுக்கும் முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழுப்புண்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க.
How to Whiten Body Skin Fast Naturally..!
முகம் பொலிவிற்கு ஃபேஸ் பேக்:-
தேவையான பொருட்கள்:-
- தயிர் – 2 ஸ்பூன்
- கடலை மாவு – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 4-5 துளிகள்.
செய்முறை:-
- மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு பேக் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.
- பின் இதனை முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
- பிறகு 15 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகம் பொலிவுடன் காணப்படும்.
பருக்களினால் ஏற்படும் தழும்புகள் மறைய:-
முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய தேங்காய் எண்ணெய் மற்றும் பட்டை ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. எனவே இவை இரண்டையும் பயன்படுத்தி சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்:-
- தேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
- பட்டை – சிறிதளவு
செய்முறை:-
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடேற்றியதும் சிறிதளவு இலவங்கப்பட்டையினை சேர்த்து நன்றாக பொரித்துக்கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெய்யை ஆறவைத்து வடிகட்டுங்கள்.
பின் இந்த எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்தலாம். அதாவது இதை முகத்தில் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள கருவளையங்கள், கரும்புள்ளிகள், பருக்களினால் ஏற்படும் தழும்புகள் அனைத்தும் நீங்கும். சருமமும் மென்மையாக காணப்படும்.
முகம் வெள்ளையாக ஃபேஸ் பேக்:
பெண்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிபட்டவர்கள் இந்த ஃபேஸ்பேக்கினை ட்ரை செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
- பீட்ரூட் பவுடர் – ஒரு ஸ்பூன்
- கடலை மாவு – ஒரு ஸ்பூன்
- சுத்தமான கெட்டி தயிர் – 1 1/2 ஸ்பூன்
செய்முறை:-
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பவுலில் செய்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தை சுத்தமாக கழுவிய பின் அப்ளை செய்ய வேண்டும்.
பின் 15 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்திற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |