Faster Hair Growth Oil At Home
வணக்கம் நண்பர்களே..! ஆண்கள் பெண்கள் அனைவருக்குமே முடி உதிர்வு பிரச்சனை, முகப்பரு போன்ற பிரச்சனைகள் இருக்கும். ஆனால் ஆண்கள் அதை பெரியதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. தலையில் இருந்து பாதம் வரை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னென்னமோ செய்வார்கள். அப்படி பெண்களுக்கு இருக்கும் ஆசைகளில் இதுவும் ஓன்று.
பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி தடவுவார்கள். ஆனால் இனி அப்படி செய்ய தேவையில்லை. வீட்டிலேயே இயற்கையான முறையில் எண்ணெய் தயாரித்து முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்க்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Faster Hair Growth Oil At Home in Tamil:
- சின்ன வெங்காயம் – 10
- தேங்காய் எண்ணெய் – 200 ml
- ஆமணக்கு எண்ணெய் – 50 ml
சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளவும்:
முதலில் 10 சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளவும். பின் அதை காய் சீவும் கட்டையில் வைத்து சீவி தனியாக எடுத்து கொள்ளவும். அப்போது தான் அதில் இருக்கும் சாறு நமக்கு கிடைக்கும்.
வெங்கயாத்தில் சல்பர் கன்டென்ட் அதிகமாக இருக்கிறது. அது முடி வளராத இடத்தில் கூட புதிய முடியை வளர செய்கிறது.
தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் ஒரே தீர்வு இந்த ஹேர் பேக் தான்..! ஒரு முறை மட்டும் ட்ரை செய்து பாருங்க..! |
கடாயை எடுத்து கொள்ளவும்:
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் 200 ml மற்றும் ஆமணக்கு எண்ணெய் 50 ml சேர்த்து கொள்ளவும். பின் அதில் நாம் சீவி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு கொள்ளவும்.
பிறகு அடுப்பை குறைத்து வைத்து எண்ணெயை நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் நன்றாக பொங்கி வரும். அதனால் கலந்துவிட்டு கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்து எண்ணெய் நன்றாக கொதித்து வெங்காயத்தின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விட்டு, அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
பின் அதை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் உங்கள் தலைமுடியில் வேரிலிருந்து நுனி வரை தடவி வந்தால் முடியின் வளர்ச்சியை நீங்களே காண்பீர்கள்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ஒரே வாரத்தில் மறைய வேண்டுமா..? அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |