2 நாட்கள் இதை தடவினால் போதும்..! உங்க பாதங்களில் இருக்கும் வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்..!

Foot Crack Cream Home Remedies in Tamil

Foot Crack Cream At Home

வணக்கம் நண்பர்களே..! பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். இன்றைய காலத்தில் பாதவெடிப்பு பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே இருக்கிறது. ஆனால் ஆண்கள் இந்த பிரச்சனையை அவ்வளவு பெரியதாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. தலைமுடி, முகம் பாதம் என்று அனைத்தையும் பார்த்து பார்த்து பராமரிப்பார்கள்.

இதுபோல செய்வதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது தான் தவறான ஒன்று. அதனால் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நம் பிரச்சனைகளை சரிசெய்யலாம். அந்த வகையில் இன்று பாதத்தில் இருக்கும் வெடிப்புகளை 2 நாட்களில் மறைய வைப்பது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாதங்களை தண்ணீரில் ஊறவைக்கவும்:

பாதங்களை தண்ணீரில் ஊறவைக்கவும்

முதலில் நம் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை மறைப்பதற்கு எந்த பேஸ்ட் அப்ளை செய்தாலும் அதற்கு உங்கள் பாதங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

அதற்கு ஒரு பக்கெட்டில் போதுமான அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் கல் உப்பு சிறிதளவு மற்றும் 1 எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து கலந்து விட வேண்டும். பின் அதில் உங்கள் பாதங்களை வைத்து குறைந்தது 15 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும்.

பின் பாதங்களை சொரசொரப்பான இடத்திலோ அல்லது ஸ்க்ரப்பரை கொண்டு பாதவெடிப்பு இருக்கும் பகுதிகளை தேய்க்க வேண்டும். பின் கழுவி ஈரப்பதம் இல்லாமல் துடைக்க வேண்டும்.

நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க

Foot Crack Cream Home Remedies in Tamil: 

Foot Crack Cream Home Remedies

  1. அரிசிமாவு – 1 ஸ்பூன்
  2.  தேன் – 1 தேக்கரண்டி
  3. வினிகர் – 1 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு 1 ஸ்பூன் அல்லது உங்கள் பாதங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் தேன் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு அதில் வினிகர் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

👉 உங்கள் முடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க  நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துவிடும் 

இந்த பேஸ்டை தூங்க செல்லும் முன் உங்கள் பாதங்களில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் அதை இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து பாதங்களை கழுவி கொள்ளவும். அதுபோல இரவில் செய்ய விருப்பம் இல்லையென்றால் பகலில் இந்த பேஸ்டை அப்ளை செய்து 30 நிமிடம் வைத்திருந்து கழுவி கொள்ளலாம்.

இதுபோல செய்து வந்தால் 2 நாட்களில் பாதவெடிப்புகள் மறைவதை நீங்களே காண்பீர்கள்.

ஒரே இரவில் முகத்தில் இருக்கும் சுருக்கம் மறைந்து முகம் இளமையாக மாற காபித்தூள் மட்டும் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil