சமையலறையில் உள்ள 3 பொருட்கள் போதும் உடல் முழுவதும் வெள்ளையாக..! – Full Body Whitening Tips in Tamil..!
Full Body Whitening Tips in Tamil:- பொதுவாக அனைவருக்கும் வெள்ளையாக மற்றும் அழகாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கப்படும் அழகு சாதன பொருட்களை வாங்கி முகத்திற்கு அப்ளை செய்வாங்க. கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட அழகு சாதன பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்வதற்கு பதில், நம் வீட்டில் சமையலறையில் உள்ள மூன்று பொருட்கள் போதும் உச்சி முதல் பாதம் வரை வெள்ளையாக. சரி வாங்க அப்படி என்ன அந்த மூன்று அழகு சாதன பொருட்கள், அதனை பயன்படுத்தி எப்படி முகத்தை ஒரே நாளில் வெள்ளையாக்கலாம் என்று இந்த பதிவில் படித்தறியலாம்.
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் |
தேவையான பொருட்கள்:-
- கான்பிளவர் மாவு – இரண்டு ஸ்பூன்
- காபி பவுடர் – இரண்டு ஸ்பூன்
- பால் – நான்கு ஸ்பூன்
- வெள்ளரிக்காய் பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்
செய்முறை:-
அடுப்பில் ஒரு கடாய் வைத்து நன்றாக சூடேற்றுங்கள், கடாய் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவு, இரண்டு ஸ்பூன் காபி பவுடர், பால் நான்கு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து கை விடாது கலவையை நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்த்து ஒரு பேக் பக்குவத்திற்கு வந்த பிறகு அடுப்பில் இருந்து கலவையை இறக்கி ஆறவிடுங்கள்.
பின் கலவை நன்றாக ஆறியதும் ஒரு பவுலில் மாற்றி கொள்ளுங்கள். பின் சிறிதளவு வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது ஃபேஸ் பேக் தயார்.
குறிப்பு:– பாலிற்கு பதில் தாங்கள் தயிர் அல்லது ரோஸ் வாட்டரை பயன்படுத்தி கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை:-
முகத்தை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள் பின் தயாரித்த இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
பிறகு 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருந்து ஈரமான கார்டன் துணியால் சருமத்தை துடைக்க வேண்டும்.
முகத்தில் மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும்? |
பயன்கள்:-
இந்த ஃபேஸ் பேக்கினை தொடர்ந்து முகத்தில் அப்ளை செய்து வருவதினால் முகத்தில் எண்ணெய் வடிவது நீங்கும், முகத்தில் உள்ள கருமைகள் மற்றும் கருத்திட்டுகள் நீங்கும், வெயில் காலத்தில் ஏற்படும் சரும வறட்சி நீங்கும். மேலும் முகம் வெள்ளையாக காணப்படும். ஒரு முறை இந்த டிப்ஸினை ட்ரை செய்தாலே போதும் சரும நிறம் மாற்றத்தை தாங்களே உணருவீர்கள்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000 |