கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

Advertisement

கண்ணாடி போல முகம் அழகாக | Glass Skin Tips in Tamil

Korean Beauty Tips in Tamil: இப்போது மக்கள் மத்தியில் கொரியன் பெண்களின் அழகு அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் அவர்களின் கண்ணாடி போல மின்னும் சருமம் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக உள்ளது. இவர்களின் அழகான சருமத்திற்கு அப்படி என்ன ரகசியம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க. மேலும் நாமும் கண்ணாடி போன்று மின்னும் சருமத்தை (Korean Skin Care Tips in Tamil) எப்படி பெறலாம் என்று தெரிந்துகொள்வோம் வாங்க.

Glass Skin Tips in Tamil:

Korean Beauty Tips in Tamil

  • கொரியா பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் ஆயில் மேக்கப், மஸ்காரா, சன்ஸ்க்ரீன் போன்றவற்றை நீக்குவதற்கு பெரும்பாலும் Cleanser பயன்படுத்துகிறார்கள்.
  • எல்லோருக்கும் முகத்தின் மேற்புறத்தில் இறந்த செல்கள் இருக்கும் அதை நீக்குவதற்கு கொரியன் பெண்கள் Scrub-ஐ உபயோகப்படுத்துகின்றனர். முகத்தில் pH அளவை சீராக வைத்து கொள்ள டோனர் உபயோகப்படுத்தப்படுகிறது.
  • சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள Moisturizer மற்றும் வெளியில் செல்வதற்கு முன்பு சன் ஸ்க்ரீனை Apply செய்து கொள்கின்றனர்.

தேவையான பொருட்கள்:

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம்

  1. ரைஸ் வாட்டர் (Rice Water) – 2 டேபிள் ஸ்பூன்
  2. பால் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை (Cleanser):

  • Glass Skin Tips in Tamil: முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ரைஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளவும்.
  • பின் ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி முகத்தில் தடவி கொள்ளவும். 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம்.

தேவையான பொருட்கள்:

korean skin care tips in tamil

  1. ரைஸ் வாட்டர் (Rice Water) – 1 டேபிள் ஸ்பூன்
  2. ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
  3. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
  4. பாதாம் ஆயில் அல்லது விட்டமின் ஆயில் – 2-3 Drops

செய்முறை (Face Mask)

  • Glass Skin Tips in Tamil: ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ரைஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2-3 Drops பாதாம் ஆயில் அல்லது விட்டமின் ஆயில் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
  • பின் இதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைக்கவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி விடவும். இந்த டிப்ஸ் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை Clear-ஆக வைத்து கொள்ள உதவும்.

தேவையான பொருட்கள்:

korean skin care tips in tamil

  1. ரைஸ் வாட்டர் – தேவையான அளவு

செய்முறை (Toner)

  • Glass Skin Tips in Tamil: Spray Bottle-ல் ரைஸ் வாட்டர் ஊற்றி முகத்தில் Spray பண்ணவும். 10 நிமிடம் கழித்து முகத்தை காட்டன் துணியால் துடைத்து விடலாம்.
  • மேற்கூறிய Method-களை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் கொரியன் பெண்களை போல உங்கள் முகமும் கண்ணாடி போல பளபளவென்று மின்னும்.
கேரளா பெண்களின் அழகு ரகசியம் இது தான்

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement